Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் மாமனார் வீட்டில் நடந்த விஷயங்களை பாண்டியனுக்கு போன் பண்ணி சொல்லி பயப்படுகிறார். பாண்டியன் தனியாக எங்கேயும் போய் இருக்காதே, கூட்டமாக இருந்து கொள். அதுதான் உன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு என்று இன்னும் அதிக அளவில் பயமுறுத்தி நக்கல் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
இப்படி இவர்கள் இரண்டு பேரும் போனில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியன் அவருடைய லவ்வை சொல்லும் விதமாக வானதிக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் நிலா வந்து சோழனிடம் யார் போனில் என்று கேட்ட பொழுது பாண்டியன் என்று சொல்கிறார். உடனே நிலா, பாண்டியனிடம் பேசிவிட்டு மற்றவர்களிடம் பேச வேண்டும் என்பதற்காக வீடியோ காலில் எல்லோரிடமும் பேசுகிறார்.
பேசி முடித்துவிட்டு சோழனிடம் நீங்கள் என்னுடைய ரூம்மில் வந்து தூங்குங்க. அப்பொழுது தான் யாருக்கும் சந்தேகம் வராது என்று சொல்கிறார். சோழன் சரி என்று சொல்லிவிட்டு உள்ளே போகும்பொழுது மனோகரும் மச்சானும் போட்ட பிளான் என்னவென்றால் சோழனை டிரைவர் தங்கும் ரூமில் தங்க வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இதைக் கேட்ட சோழன், மாமனார் மச்சான் பிளானை சொதப்பும் வகையில் நிலாவிடம் கார் ஓட்டிட்டு வந்தது சோர்வாக இருக்கிறது நான் ரூமுக்கு போய் தூங்குகிறேன் என்று சொல்லி நிலாவின் ரூமுக்கு சோழன் போய் விடுகிறார். இதனால் மாமனாரும் மச்சானும் எதுவும் பேச முடியாமல் நிலாவிடம் அமைதியாக இருக்கிறார்கள். உடனே ரூமுக்கு போன சோழன் சந்தோஷத்தில் இருக்கும் பொழுது நிலா சோழனுக்காக கீழே தனிப்பெட்டை போட்டிருக்கிறார்.
இதை பார்த்து சோழன் இப்பொழுது தானே ரூமுக்குள் வந்திருக்கிறேன் போக போக ஒரே கட்டில் தூங்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார். அடுத்ததாக நிலவும் வந்து சோழனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து பல்லவன் வீட்டு வாசலில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடேசன் சாப்பாடு கடையில் வாங்கிட்டு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது விக்கல் எடுத்ததால் பல்லவன் பரிதாபத்துடன் அப்பாவுக்கு தண்ணி கொண்டு வந்து கொடுக்கிறார்.
அடுத்ததாக பல்லவன் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மா பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே நடேசன் இடம், எங்க அம்மா இப்பொழுது எங்கே இருக்கிறாங்க என்ன பண்றாங்க உண்மையை சொல்லுங்க என்று கேட்கிறார். அதற்கு நடேசன் அதெல்லாம் சொல்ல முடியாது போய் வேலைய பாரு என்று திட்டி அனுப்பி விடுகிறார். பல்லவனும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் வருத்தத்துடன் போகிறார். இதனால் தொடர்ந்து படிக்க முடியாமல் தூங்க போய் விடுகிறார்.