Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவின் கல்யாணம் என்பதால் சேரன் டல்லாகிவிட்டார். சேரன் இதை நினைத்து பீல் பண்ணுகிறார் என்று யோசித்து சோழன் நிலா பாண்டியன் மற்றும் பல்லவன் அனைவரும் கவலையாக இருக்கிறார்கள். ஆனாலும் சேரன் அவருடைய சோகத்தை வெளிக்காட்டாமல் அனைவருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட சொல்கிறார்.
சேரனும் சாப்பிடும் பொழுது கார்த்திகாவின் கல்யாணத்தில் போடும் பாட்டு சேரனை ரொம்பவே ஃபீல் பண்ண வைத்துவிட்டது. உடனே சேரன் தனியாக போய் அழ ஆரம்பித்து விடுகிறார். இதை பார்த்த தம்பிகள் நாம் என்ன பண்ணுவது நாமும் ரிஸ்க் எடுத்து எப்படியாவது கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று முடிவு பண்ணினோம். ஆனால் அதற்கு அந்த கார்த்திகா துணிச்சலாக வரவில்லை.
இதற்கு மேலேயும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கார்த்திகா அழுது கொண்டே சேரனை பார்த்து பேசுவதற்காக வீட்டுக்கு வருகிறார். அப்பொழுது எல்லோரும் நீ ஏன் இங்கே வந்தாய், உன் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு தான் பிரச்சினை ஆகும். தயவு செய்து போய்விடு என்று சொல்கிறார்கள்.
ஆனால் கார்த்திகா என்ன ஆனாலும் தெரியும் நான் சேரன் மாமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். அவர மனசுல வச்சுட்டு வேறு யாரையும் கல்யாணமும் பண்ண மாட்டேன். நான் இங்கே தான் இருப்பேன் என்று தீர்மானமாக சொல்லிவிடுகிறார். உடனே நடேசன், மஞ்ச கயிறு கொடுத்து தாலி கட்டு என்று சேர என்னிடம் சொல்கிறார்.
சேரனும் மாப்பிள்ளை மாதிரி வேஷ்டி சட்டையை போட்டு கார்த்திகா கழுத்தில் தாலி கட்டுவதற்கு தயாராகி விட்டார். அப்படி தாலி கட்டும் பொழுது கார்த்திகாவின் அம்மா அப்பா பேருந்து வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததும் சேரன் அவர்கள் கண் முன்னாடியே கார்த்திகா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்