moondru mudichu: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், சுந்தரவல்லியை வெறுப்பேற்றும் விதமாக சூர்யா சில விஷயங்களை செய்தாலும் நந்தினியை பகடைக்காயாக பயன்படுத்துவது நந்தினிக்கு பிடிக்கவில்லை. இதனால் சூர்யா மற்றும் நந்தினிக்கு இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதை சரி செய்யும் வேண்டுமென்றால் சூர்யா, நந்தினி உணர்வை புரிந்து கொண்டு மனசு மாற வேண்டும்.
அந்த வகையில் சுந்தரவல்லி வீட்டில் நடக்க போகும் வரலட்சுமி பூஜையில் பல விஷயங்கள் மாறப்போகிறது. அதாவது இந்த வரலட்சுமி பூஜையில் நந்தினி கழுத்தில் தாலி கட்டி சம்பிரதாயத்தை செய்ய வேண்டும் என்று சூர்யா நினைத்தாலும் இன்னொரு பக்கம் சுந்தரவல்லிக்கு பிடிக்காது என்பதால் இதை செய்ய வேண்டும் என்று சூர்யா மும்மரமாக இருக்கிறார்.
சூர்யாவின் மனநிலை புரிந்து கொண்ட சுந்தரவல்லி, நந்தினியை தனியாக கூப்பிட்டு இந்த பூஜையில் கலந்து கொள்ள கூடாது என்று திட்டி விடுகிறார். இதனால் நந்தினி வீட்டில் இருப்பவர்களிடம் எதுவும் சொல்லாமல் வெளியே போய் விடுகிறார். ஆனால் சுந்தரவல்லி வீட்டுக்கு கெஸ்ட் ஆக வரும் வடிவுக்கரசியின் நம்பிக்கை கூறியவர் ஆக நந்தினி மாறுகிறார்.
அதனால் சுந்தரவல்லி வீட்டுக்கு நந்தினி வருகிறார். வந்ததோடு பூஜையில் கலந்து கொண்டு சூரியக் கையால் தாலி கட்டிக் கொள்வார். இந்த முறை குறி தப்பாகாது என்பதற்கு ஏற்ப சூர்யாவின் மனசு மாறி நந்தினி சூர்யாவின் காதல் வெளிவரப் போகிறது. அந்த வகையில் மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழப்போகிறார்கள்.