Nepotism: பாலிவுட் சினிமாவில் தான் இந்த நெப்போ கிட்ஸ்கள் கலாச்சாரம் அதிகம் இருந்தது. தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் தனிமனிதராக சினிமாவில் முயற்சி செய்து மீறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காலகட்டமும் இருக்கிறது.
ஆனால் கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாரிசுகள் ஒன்றன்பின் ஒன்றாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஐந்து நெப்போ கிட்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
5 நெப்போ கிட்ஸுகள்
ஜேசன் சஞ்சய்: தளபதி விஜய் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றிரண்டு குறும்படங்களை இயக்கினார். அப்பாவை போல் ஹீரோவாக இல்லாமல், தாத்தாவைப் போல் இயக்குனர் ஆக சினிமாவில் தடம் பதித்திருக்கிறார்.
எந்த ஒரு அறிமுக இயக்குனருக்கும் கிடைக்காத வாய்ப்பாக முதல் படமே லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.
மற்ற அறிமுக இயக்குனர்கள் எல்லாம் தங்களுடைய கதைகளை எடுத்துக் கொண்டு ஆபீஸ், ஆபீஸ் ஆக சுற்ற வேண்டும். ஆனால் ஜேசன் சஞ்சயை பொருத்தமட்டிலும் தனக்கு எந்த ஹீரோ வேண்டும் என அவரே தான் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார்.
சூர்யா சேதுபதி: விஜய் சேதுபதிக்கு 30 வயசுக்கு மேல் தான் ஹீரோவாகும் வாய்ப்பே கிடைத்தது. ஆனால் அவருடைய மகன் சூர்யா சேதுபதி 19 வயதிலேயே அதிரடி ஆக்சன் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
வீழான் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கும் இவரின் அடாவடிகள் கொஞ்சம் அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது.
துருவ் விக்ரம்: விக்ரமின் கடினமான உழைப்பு பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால் அந்த கஷ்டம் எதையுமே தன் மகனுக்கு கொடுக்க விரும்பவில்லை.
எடுத்ததும் ஹீரோ, அதுவும் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு அது வேண்டாம் என ஓரங்கட்டி விட்டு புது பட்ஜெட் போட்டு அதே கதையை இன்னொரு இயக்குனர் இயக்கி வெளியானது தான் ஆதித்ய வர்மா.
இப்படி ஓவர் செல்லம் கொடுத்ததால் தான் என்னவோ துருவ் விக்ரம் அப்பாவை போல் மக்கள் மனதில் நிற்கவில்லை.
அதிதி சங்கர்: அப்பாவுக்கு பிடிக்காமல் தான் சினிமாவுக்குள் நுழைந்தேன் என அதிதி சங்கர் சொன்னாலும், அவருக்கு கிடைக்கும் மரியாதை எல்லாம் பார்க்கும்போது அறிமுக ஹீரோயின் போல் தெரியவில்லை. ஷங்கரின் பிரபலத்தால் முழு ஆளுமையோடு அதிதி சங்கர் கோலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பவிஷ்: பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தன்னுடைய அக்கா மகனை அசால்ட்டாக ஹீரோ ஆக்கிவிட்டார் நடிகர் தனுஷ். பவிஷ் நாராயணன் ஏற்கனவே வாத்தி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தார். இவரை தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் ஹீரோவாக்கி இருக்கிறார் .