Jacqueline: நயன்தாரா முன்னணி இடத்தை அடைந்த பிறகு அவர் வைத்தது தான் சட்டம் என்ற ரீதியில் நடந்து கொள்கிறார். பிரமோஷனுக்கு வரமாட்டேன் இவ்வளவு சம்பளம் தான் வேண்டும் என ஏகப்பட்ட ரூல்ஸ் போடுவார்.
ஆனாலும் அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இதுவே அவருக்கு பின்னடைவாக மாறி சர்ச்சை ராணி என்ற பெயரையும் வாங்கி கொடுத்து விட்டது.
ஆனால் அவரையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார் விஜய் டிவி ஜாக்லின். ஏற்கனவே இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ அம்மணி இப்போது சூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாத வேலை பார்த்திருக்கிறார்.
இயக்குனருக்கு கொடுத்த டார்ச்சர்
சமீபத்தில் வெளிவந்த கெவி படத்தில் இவரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அவர் இயக்குனரிடம் படத்தில் நான் 40 நிமிஷம் கட்டாயம் வரவேண்டும். அப்படித்தான் கதை இருக்க வேண்டும் என கட் அண்ட் ரைட் ஆக பேசியிருக்கிறார்.
படமும் நன்றாகத்தான் வந்திருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் காட்சி எடுப்பதற்கு முன்பு எனக்கு முழு பணத்தையும் செட்டில் செய்து விடுங்கள் அப்போதுதான் ஷூட்டிங் வருவேன் என திரும்பவும் தகராறு செய்திருக்கிறார்.
இதனால் அதிர்ந்து போன தயாரிப்பு தரப்பு எப்படியோ அங்கு இங்கு பணத்தை புரட்டி அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் பணத்தை வாங்கிக் கொண்டு கடைசி நேரத்தில் நடிக்க முடியாது என்று எஸ்கேப் ஆகி இருக்கிறார்.
படப்பிடிப்புக்கு தேவையான எல்லா வேலையும் முடித்து தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் ஜாக்லின் காலை வாரியதால் இயக்குனர் வேறொரு வேலை பார்த்திருக்கிறார்.
என்னவென்றால் தன்னுடைய உதவியாளருக்கு ஜாக்லின் போல் மேக்கப் போட்டு உடை அணிவித்து எப்படியோ அந்த கிளைமாக்ஸ் காட்சியை முடித்திருக்கிறார். அதன் பிறகு ப்ரமோஷனுக்கு கூப்பிட்டால் முழு படத்தையும் காட்டுனா தான் வருவேன் என மீண்டும் ஜாக்லின் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்.
அதையும் பட குழு செய்திருக்கிறது. ஆனாலும் கடைசி வரை அவர் பிரமோஷனுக்கு வரவில்லை. வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் போதே இவ்வளவு அட்டகாசம் என்றால் முன்னணி இடத்தை பிடித்து விட்டால் அவ்வளவுதான்.