Trisha: திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வலம் வரும் திரிஷா பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரொம்பவும் பிசியாகிவிட்டார். லியோ, விடாமுயற்சி என அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சமீப காலமாக அவர் நடிப்பில் வரும் படங்களில் அவருடைய கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. ஏதோ ஹீரோயின் என்ற பெயரில் வந்து போகிறார். அதிலும் தக் லைஃப் படத்தில் கமலுடன் ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை என்பதுதான் அனைவரின் கருத்து.
பெரிய ஹீரோயின் படமும் சம்பளமும் மட்டும் போதுமா. கதாபாத்திரம் இவருக்கு தேவை இல்லையா என்பது அவர் ரசிகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது. உண்மையில் த்ரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கத்தான் செய்தார்.
பாலிசியை மாற்றி வாய்ப்பை பிடிக்கும் மாமி
ஆனால் அது அவருக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. நயன்தாராவை பார்த்து தான் அவரும் அதே ரூட்டுக்கு போனார். ஆனால் கையை சுட்டுக் கொண்டதுதான் மிச்சம். நயன்தாராவுக்கு ஒர்க்கவுட் ஆனது த்ரிஷாவுக்கு ஒரம் கட்டியது.
இது வேலைக்காகாது என்று தன்னுடைய பாலிசியை மாற்றி இப்போது வாய்ப்பை வாங்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிப்பது பெரிய விஷயம்.
இத்தனை வயதுக்கு பிறகும் ஹீரோயின் கேரக்டர்கள் அமைவதும் பெரிது தான். அதனால் தான் திரிஷா கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறார் என்கிறது திரையுலக வட்டாரம்.