Coolie : கூலி படம் வெளிவருவதற்கு முன்பு ரொம்ப ஹைப் ஏற்றி கூலி படத்தை காப்பாற்றி வந்தார் லோகேஷ். ஆனால் தற்போது படம் வெளிவந்து அதே ஹைப் குறையாமல் இருக்கிறதா என்று கேட்டால் சற்று சந்தேகமே.
மக்கள் காசு கொடுத்து வாங்கி பார்க்கும் டிக்கெட்க்கு எந்த விதத்துலையும் நட்டம் இல்லாமல் படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கூறிய விமர்சனங்கள், எத்தனை படம் எடுத்தாலும் விக்ரம் போல ஒரு படத்தை லோகேஷ் கொடுக்கமுடியாது என அதிருப்த்தியோடு கூறியுள்ளார்கள்.
படத்தில் நடித்திருந்த உபேந்திரா அவரது கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். உபேந்திராவின் நடிப்பு கூலிக்கு ஒரு பிளஸ் ஆக அமைந்திருந்தது. சௌபின் நடிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை அனைவரும் கீழே தள்ளி சூப்பர் பெர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளார்.
நாகார்ஜூனா தான் கூலி படத்தை கெடுத்ததா..
அமீர்கான் வந்தது சிறிது நேரமே என்றாலும் மாஸ்ஸாக இருந்தது. ஆனால் நாகார்ஜூனாவிற்கு வில்லன் கதாபாத்திரம் பொருந்திருந்ததா என்று பார்த்தால் சற்று சந்தேகமே! இவரை விட சௌபின் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். பேசாமல் சௌபினை வில்லனாக வைத்திருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் நாகர்ஜூனாதான் இந்த படத்தை கெடுத்ததா என்ற கேள்வி எழுகிறது. பார்க்கலாம், வெளிவந்து 2 நாட்கள்தானே ஆகியுள்ளன. மீதமுள்ள நாட்களிலில் என்ன நடக்கிறது, மக்கள் கருத்து எப்படியுள்ளது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.