Memes: ஆடி மாசம் வந்தாலும் வந்துச்சு எங்க திரும்பினாலும் மீம்ஸ் தான் கலை கட்டி வருகிறது. ஒரு பக்கம் கோவில் திருவிழா ஒரு பக்கம் ஆடி ஆஃபர் இன்னொரு பக்கம் புது மாப்பிள்ளை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதில் புது ஜோடி ஒரு மாதம் பிரிந்து இருக்க வேண்டுமே என சோக கடலில் இருப்பார்கள். ஆனால் என் பொண்டாட்டி போக மாட்டேங்கிறாளே என வருத்தத்தில் பழைய மாப்பிள்ளைகள் சோக கீதம் பாடி வருகின்றனர்.

அதேபோல் திருமணம் ஆன புது மாப்பிள்ளைகளுக்கு இப்போதுதான் நண்பனின் நினைவு வரும். கல்யாணத்துல உன்ன பாத்தது. பொண்டாட்டி ஆடி மாசம் ஊருக்கு போனதும் இப்பதான் உன் கண்ணுக்கு நாங்க தெரிகிறோமா என நண்பர்கள் கலாய்ப்பது உண்டு.

ஆனால் திருமணம் ஆகாதவர்கள் இதை கூட ஜாலியாக சொல்வார்கள். நல்லவேளை எங்களுக்கு கல்யாணம் ஆகல இல்லனா பொண்டாட்டிய பிரிஞ்சு இருக்க வேண்டி இருக்கும் என சமாளிப்பார்கள்.

அதேபோல் வீட்டோட மாப்பிள்ளையா போனவன் ஆடி மாசம் எங்க போவான் என கேள்வி கேட்கும் அதிபுத்திசாலிகளும் உண்டு. இப்படி ஆடி மாசம் வந்தாலே ஒரே ஜாலிதான்.

நானே என் பேத்திக்கு குழந்தை பிறந்திருக்கு பாக்க போயிட்டு இருக்கேன். என்ன போய் ஆடி மாசம் அம்மா வீட்டுக்கு போறியான்னு கேட்கிறான் தம்பி. ஆடி மாசம் வந்தா ஜாலியா இருக்கும் மாமா, ஏன் பொண்டாட்டி ஊருக்கு போய்டுவாளா.

அதெல்லாம் இல்ல கோவில்ல கூழ் ஊத்துவாங்க என பல மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது அதன் தொகுப்பு இதோ.
