Gossip: மாஸ் நடிகர் கேரியரின் உச்சத்தில் இருந்தாலும் அதை விட்டுவிட்டு இப்போது மக்கள் பணிக்காக களம் இறங்கி விட்டார். அவர் நினைத்தது போல் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் அந்த முக்கிய கட்சி கொஞ்சம் பீதியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது. அதனாலேயே இணைய கூலி படைகள் நடிகரின் புகழை கெடுக்க சோசியல் மீடியாவில் தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.
ஆனால் அதையெல்லாம் தகர்க்க நடிகரும் ஏகப்பட்ட பிளான் போட்டு சத்தம் இல்லாமல் காய் நகர்த்தி கொண்டிருக்கிறார். அதில் விரைவில் நடக்கப் போகும் அந்த சம்பவத்திற்காக ஒட்டு மொத்த மீடியாக்களும் காத்துக் கொண்டிருக்கிறது.
நடிகரின் செல்வாக்கை குறைக்க திட்டம் போடும் சின்னவர்
மூன்றெழுத்து ஊரில் நடக்கப் போகும் இந்த நிகழ்வை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என மேலிடம் குடைச்சல் கொடுத்து வருகிறது. தேதி மாற்றியதில் தொடங்கி சில பல நெருக்கடிகளும் கட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம் சின்னவர் தான் என்கின்றனர். ஆனாலும் சம்பவ நாளன்று மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. தேசிய ஊடகங்கள் அனைத்தும் நம் பக்கம் தான் இருக்கும் என நடிகரின் விசுவாசிகள் வீர முழக்கமிட்டு வருகின்றனர்.
இப்படி நாற்காலிக்காக நடக்கும் போட்டி பலமாக இருக்கிறது இதில் நடிகர் நினைத்ததை சாதிப்பாரா என்பது பெரும் கேள்விக்குறியாகவும் உள்ளது.