Suriya : சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. கடந்த பத்து வருடங்களாகவே தியேட்டரில் சூர்யா ஹிட் படங்கள் கொடுக்கவில்லை.
இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாலாபக்கமும் வலை வீசி எல்லா மொழி இயக்குனர்களையும் சூர்யா லாக் செய்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் இப்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம் உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து சூர்யாவின் 46 ஆவது படத்தை வெங்கி அட்லூரி இயக்க இருக்கிறார். இவர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் மற்றும் தனுஷின் வாத்தி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
சூர்யா கைவசம் இருக்கும் இயக்குனர்கள்
இதற்கு அடுத்தபடியாக மலையாள இயக்குனரான ஜித்து மாதவன் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இவர் இதற்கு முன்னதாக பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தை இயக்கியிருந்தார். இப்போது சூர்யாவின் 47வது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.
இது தவிர பாலிவுட் இயக்குனர் உடனும் சூர்யா பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறாராம். ஆகையால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி இயக்குனர்களுடனும் பணியாற்றுகிறார்.
கண்டிப்பாக இதன் மூலம் சூர்யா ஒரு நல்ல கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கருப்பு படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோக்கள் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.