Gossip: சீரியல் என்றாலே அந்த சேனல் தான் என்று சொல்லும் அளவுக்கு கொடிகட்டி பறந்த தொலைக்காட்சி தான் அது. ஆனால் இப்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று கூட பார்க்கும் ரகம் கிடையாது.
சோசியல் மீடியா காலகட்டத்திற்கு முன்பு இந்த சேனலில் வரும் சீரியல்களுக்கு ஆண்கள் கூட அடிமையாக இருந்தனர். குடும்பங்கள் சேர்ந்து பார்த்து கொண்டாடிய காலம் போய் இப்போது வெறுக்கும் நிலை வந்துவிட்டது.
அதற்கு காரணம் அந்த முக்கிய பெண்கள் சீரியல் தான். ஆரம்பத்தில் அந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்தது. அதற்கு அதில் நடித்த வில்லன் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
புலம்பவிட்ட சீரியல்
ஆனால் அவருக்கு பிறகு வந்தவர் சீரியலின் போக்கையே மாற்றி விட்டார். பெண்களை கொத்தடிமை போல் நடத்துவதும் கேவலமாக பேசுவதும் என சீரியலின் ஆரம்ப நிலை இப்போது மாறிவிட்டது.
இதனால் பல பேர் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள். அதிலும் சிலர் வீட்டுக்கு வந்தா நிம்மதியாய் இருக்கலாம்னு பார்த்தா இந்த சீரியல் எங்க நிம்மதிய கெடுக்குது பிபி ஏறுது என வெளிப்படையாகவே புலம்புகின்றனர்.
இது சம்பந்தப்பட்ட சேனலுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. கூடிய விரைவில் இந்த சீரியலுக்கு மங்களம் பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.