ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவுக்காக தனி பாத்ரூம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்கள். அதை செய்து முடிக்கும் வகையில் சேரன் ஆட்களை கூட்டிட்டு வந்து கட்டுவதற்கு தயாராகி விட்டார். அந்த நேரத்தில் பெரியப்பா வந்து கோர்ட் உத்தரவின் படி இந்த இடத்தில் நீங்கள் எதுவும் பண்ணக்கூடாது என்று சொல்கிறார்.
இதனால் பல்லவன் சோழன் பெரியப்பாவிடம் வாக்குவாதம் பண்ணுகிறார்கள். இதை பார்த்த நடேசன், அண்ணனை தனியாக கூட்டிட்டு போயி நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடு நான் உன் மருமகள் வீட்டுக்கு போய் நடந்த விஷயத்தை சொல்லுகிறேன் என்று பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார்.
உடனே பெரியப்பா நீ அப்படி என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்டதும் உன் வீட்டு மருமகளும் என் பையனும் காதலித்ததும் கல்யாணத்துக்கு முதல் நாள் வந்து கல்யாணம் பண்ண சொல்லி கெஞ்சியதையும் சொல்வேன் என்று நடேசன் சொல்கிறார். இதனால் பெரியப்பா எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக போய் விடுகிறார்.
பிறகு நடேசன் அவர் வந்து இனி பிரச்சினை பண்ண மாட்டார். நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிங்க என்று சொல்லியதும் சேரன் பாத்ரூம் கட்டுவதற்கு வேலை ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக நிலா ஆபிஸில் வேலை முடித்ததும் வீட்டுக்கு வந்து பாத்ரூம் கட்டுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது நடேசன் கையில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காயத்தை பார்த்து மருந்து போட கூப்பிடுகிறார்.
ஆனால் நடேசன் இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லியதும் பல்லவனிடம் உன்னால் தான் இப்படி ஆயிருக்கிறது நீ போய் மன்னிப்பு கேளு என்று சொல்கிறார். பல்லவன் நான் எதுவும் பண்ணவில்லை அவரா தான் போய் ஆடினார் இதற்கு நான் எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிய நிலையில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்ததும் பல்லவன் நிலாவிடம் கோபமாக கத்த ஆரம்பித்து விட்டார்.
இதை பார்த்து சேரன், பல்லவனுக்கு அட்வைஸ் பண்ண போகும் பொழுது நிலா, இதை இப்படியே விடுங்கள் பல்லவன் என்ன பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார். அடுத்து பல்லவன், நிலாவிடம் பேச வரும் பொழுது நிலா கோபமாக இருப்பது போல் முகத்தை காட்டுகிறார். உடனே பல்லவன் அழுது பீல் பண்ண ஆரம்பித்து விடுகிறார். அதன் பிறகு சேரன் மற்றும் நிலா சமாதானப்படுத்துகிறார்கள்.