Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா மனசை குழப்பி சோழன் மீது சந்தேகப்படும்படி செய்து ஒரேடியாக நிலாவை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மனோகர் பிளான் பண்ணிவிட்டார். மனோகர் பிளான் படி நிலாவின் அம்மா தேன்மொழியும், நிலா குழப்பத்தில் இருக்கும் பொழுது பணத்துக்கு ஆசைப்படாதவங்க யாரும் கிடையாது.
அதில் அந்தச் சோழனும் விதிவிலக்கு அல்ல, பணத்தையும் நகையும் பார்த்ததும் நீ தேவையில்லை என்று முடிவு பண்ணி பணத்தை தூக்கிட்டு போய் விட்டான் என்று நிலா நம்பும்படி தேன்மொழி குழப்பி விடுகிறார். இதனால் நிலாவுக்கும் ஒரு நிமிஷத்தில் சோழன் மீது சந்தேகம் வந்து விடுகிறது. சோழன் ஏற்கனவே நிறைய நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறான்.
இப்படிப்பட்டவன் ஏன் இந்த பணத்தையும் இவங்க சொல்ற மாதிரி எடுத்துட்டு போயிருக்க கூடாது என்று யோசித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டார். ஆனாலும் இக்கட்டான சூழலில் இருக்கும் போது செய்த நல்ல விஷயங்களையும் யோசித்து சோழன் அப்படிப்பட்டவன் கிடையாது, நிச்சயம் வேறு ஏதோ ஒரு பிரச்சனை என்று யோசிக்கிறார்.
அந்த வகையில் பாண்டியனுக்கு போன் பண்ணி பார்த்து சோழன் போன் சுவிட்ச் ஆப் இருக்கிறது. அங்கே ஏதாவது வந்தாரா இல்லை என்றால் உங்களிடம் ஏதாவது பேசினாரா என்று கேட்கிறார். சோழன் இங்கே வரவும் இல்லை, பேசவும் இல்லை என்று பாண்டியன் சொல்லி விடுகிறார். அதன் பிறகு பாண்டியன், மனோகர் போடும் திட்டத்தையும் இதனால் எனக்கு ஏதாவது ஒரு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று சோழன் சொன்ன விஷயத்தையும் யோசித்துப் பார்க்கிறார்.
அதனால் சோழனை காப்பாற்றும் விஷயத்தில் சேரன் உதவியுடன் பாண்டியன் சோழனை கண்டுபிடித்து மாமனார் வீட்டுக்கு கூட்டிட்டு போயி நிலாவுக்கு நடந்த விஷயத்தை போட்டு உடைத்து விடுவார். அதன் பிறகு நிலா, உங்க சகவாசமே வேண்டாம் என்று குடும்பத்துக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு சோழனுடன் அய்யனார் வீட்டிற்கு வந்துவிடுவார்.