Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில், நிலா ஹாஸ்டலுக்கு போன பிறகு அய்யனார் வீட்டில் இருப்பவர்கள் நிலாவை நினைத்து பீல் பண்ணுகிறார்கள். அத்துடன் நிலா இந்த வீட்டில் இருக்கும் பொழுது என்னென்னலாம் பண்ணினார் என்பதை யோசித்து பல்லவன் அழ ஆரம்பிக்கிறார். சேரனும் நிலா இல்லாததை நினைத்து தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
சோழன் தன்னால்தான் இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை வருத்தப்பட்டு வாசலில் நின்று பீல் பண்ணுகிறார். ஆக மொத்தத்தில் நிலா வீட்டை விட்டுப் போன பிறகு அனைவரும் சேர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி நிலாவும் ஹாஸ்டலில் இருக்கும் பொழுது அய்யனார் வீட்டில் இருந்ததை நினைத்து வருத்தப்படுகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக சில விஷயங்களை யோசித்து பீல் பண்ணி பிறகு ஆபீஸ்க்கு கிளம்புவதற்கு தயாராகிறார். அப்பொழுது வாசலில் நின்று கொண்டிருந்த நடேஷனை பார்த்த நிலா வெளியே வந்து பேசுகிறார். அப்பொழுது நடேசன், சோழன் உன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு முழு பொறுப்பு நான் தான். நான்தான் அவனை உசுப்பேத்தி விடும் விதமாக சில விஷயங்களை பேசி விட்டேன்.
அதனால் தான் அவன் அப்படி நடந்து கொண்டான் என்று நடந்த உண்மையை சொல்கிறார். இதை கேட்டதும் அதிக அளவில் நிலா கோபப்பட்டு நடேசனை வாய்க்கு வந்தபடி திட்டி அனுப்பி விடுகிறார். அடுத்ததாக சோழனிடம் பேசாமல் சேரன் பாண்டியன் பல்லவன் அனைவரும் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சோழன் நான் பண்ணியது தவறுதான் என்று மன்னிப்பு கேட்கிறார் /
இருந்தாலும் யாரும் மன்னிப்பதற்கு தயாராக இல்லை பிறகு சோழன் வருத்தப்பட்டு கொண்டு வெளியே கிளம்பும்போது ஊர் மக்கள் அனைவரும் நிலா வீட்டை விட்டுப் போனதை சொல்லி சோழனை வெறுப்பேற்றுகிறார்கள். இதனால் கோபப்பட்ட சோழன் அவர்களிடம் சண்டை போடும் விதமாக பிரச்சனை பண்ணுகிறார். பிறகு அங்கு வந்த பாண்டியன் சோழனை கூப்பிட்டு கிளம்பி விடுகிறார்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நிலா வீட்டுக்கு வர வேண்டும் என்று முடிவு பண்ணிய சோழன் நிலா வேலை பார்க்கும் ஆபீசுக்கு சென்று வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். சோழனை பார்த்த நிலாவின் தோழி நிலாவிடம் அன்னைக்கு ஆபீஸ்க்கு வந்து பிரச்சனை பண்ணிய உன்னுடைய சொந்தக்காரர் வாசலில் நிற்கிறார் என்று சொல்கிறார். அப்பொழுது நிலா வெளியே வந்து சோழனை பார்க்கிறார். அந்த வகையில் நிலவிடம் சோழன் மன்னிப்பு கேட்கிறார்.