Ayyana Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா வீட்டுக்கு வந்த சோழன் மாமனாரும் மச்சானும் என்ன செய்து நிலாவையும் என்னையும் பிரிக்கப் போகிறார்கள் என்ற பயத்தில் இருக்கிறார். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நிலாவுடன் நெருங்கி பழகும் விதம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் என எக்கச்சக்கமான சந்தோஷங்கள் மாமனார் வீட்டில் கிடைக்கிறது.
அதற்கு ஏற்ற மாதிரி நிலாவும் அப்பா வீட்டில் இருப்பவர்களுக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடக்கூடாது என்பதற்காக சோழனின் மனைவியாக சில விஷயங்களை செய்வதற்கு தயாராகி விட்டார். அதனால் ஒரே ரூமில் தூங்க சொல்லி, காபி காலையில் எழுந்து கொடுத்து சோழனை பாசத்தால் உருக வைக்கிறார்,
இது சோழனுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, அதனால் நிலா காட்டும் சின்ன சின்ன பாசமும் சோழனுக்கு காதலை ஏற்படுத்தும் அளவிற்கு ஃபீல் பண்ணுகிறார். ஆனால் நிலாவின் நடவடிக்கைகளை பார்த்து அப்பா அம்மா அண்ணன் மூன்று பேரும் கடுப்பாகிறார்கள். இதற்கு இப்பொழுதே முடிவு கட்ட வேண்டும் என்று தான் சோழனுக்கு செக் வைக்கப் போகிறார்கள்.
இன்னொரு பக்கம் வானதி பாண்டியன் எனக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து விட்டார். பாண்டியனும் வானதி அனுப்பும் மெசேஜை பார்த்து சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். அதனால் இவர்களுடைய காதல் உறுதியாகிவிட்டது. தொடர்ந்து காதலிக்க ஆரம்பித்து சோழனுக்கு அடுத்தபடியாக இவர்களுடைய கல்யாணம்தான் நடக்கப் போகிறது.