Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் காதலித்து தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள் என்று நம்பிய மனோகர் இத்தனை நாள் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளாமலும் நிலா மீது கோபமும் பட்டு வந்தார். ஆனால் திடீரென்று தான் நினைத்தால் என்னவானாலும் செய்ய முடியும் என்ற அர்த்தத்தில் நிலாவையும் சோழனையும் பிரிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அதனால் சோழனிடம் சவால் விட்டு சோழன் வீட்டுக்கு வந்து நல்லவர் போல திருந்தியதாக டிராமா போட்டு நிலாவையும் சோழனையும் ஒரு வாரத்திற்கு வீட்டிற்கு அழைத்துப் போவதாக சேரனிடம் கூறியிருந்தார். உடனே சேரனும் சரி என்று அனுப்பி வைக்கும் பட்சத்தில் இதிலிருந்து போகாமல் எப்படியாவது பின்வாங்க வேண்டும் என்று சோழன் எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்கிறார்.
என்னுடைய வேலையை முடித்துவிட்டு நானே நிலாவை கூட்டிட்டு வருகிறேன் என்று எல்லோரும் முன்னாடியும் மாமனாரிடம் சொல்கிறார். உடனே மாமனார் வேலைதான் முக்கியம், வேலையை முடித்துவிட்டு வாங்க ஆனால் நான் இப்பொழுது நிலவை கூட்டிட்டு போகிறேன் என்று சொல்கிறார். உடனே நிலவும் சரி அப்பா என்று சொல்லி அப்பா கூட கிளம்புவதற்கு தயாராகி விட்டார்.
இதை பார்த்த சோழன், நாம் போகவில்லை என்றாலும் நிலா போவதற்கு தயாராகி விட்டாரே, அப்படி என்றால் திரும்ப வருவது சந்தேகம் தான் என்று பயப்பட ஆரம்பித்து விட்டார். உடனே சேரன் ரெண்டு பேரும் போனால் தான் நன்றாக இருக்கும் நீயும் கூட போயிட்டு வா என்று சோழனிடம் சொல்கிறார். அதனால் தோல் எனக்கு வேறு வழி இல்லை நிலாவுடன் மாமனார் வீட்டுக்கு கிளம்பி விடுவார்.
அங்கே போனதும் ஏகப்பட்ட கலாட்டாக்கள் பிரச்சனைகள் சிக்கல்கள் எல்லாத்தையும் சகித்து வரும் சோழனிடம் பிளான் பண்ணி நிலவை தவறாக காட்டி விடுவார்கள். இதனால் சோழனுக்கும் நிலாவுக்கும் விரிசல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடைசியில் சோழன் குடும்பத்தை விட்டு இருக்க முடியாமல் நிலா திரும்ப சோழன் வீட்டிற்கு வந்து விடுவார்.