Vijay: திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, இந்த வார்த்தை தான் முதலில் தளபதி விஜய் திமுகவுக்கு எதிராக பேசியது. விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் பொதுக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களை பற்றி பேசு இருந்தார். ஒன்று பாஜக மற்றும் திமுக அரசுடன் என்றைக்கும் கூட்டணி கிடையாது.
மற்றொரு தீர்மானம் பரந்தூர் விமான நிலையம் அமைப்பு குறித்து. 1500 குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என திமுக அரசு சொல்லியிருந்தது. இதை மீண்டும் நினைவுப்படுத்தி 1500 குடும்பங்கள் என்பது நம் மக்கள் கிடையாது ஸ்டாலின் அவர்களே.
நீங்கள் உடனடியாக பரந்தூருக்கு வந்து அந்த 1500 குடும்பத்தை நேரில் சந்தித்து ஆக வேண்டும். இல்லை என்றால் அந்த குடும்பங்களை அழைத்துக் கொண்டு நான் தலைமைச் செயலகத்துக்கு வந்து உங்களை சந்திப்பேன்.
விஜய் சொல்லிய இந்த விஷயம் நடந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் பிரமித்து போய்விடும். கடந்த 2024 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த விஜய் நாளுக்கு நாள் இப்படி மெருகேறிக் கொண்டே வருவது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அவர் மீது நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது