Sun Tv : லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் பிரபலங்கள் ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் சமீபத்தில் இந்த படத்தின் விழாவை சன் டிவி பிரம்மாண்டமாக நடத்தியது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து எந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகாமல் மிகவும் கவனமாக சன் நெட்வொர்க் பார்த்துக் கொள்கிறது. ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ லான்ச்சிலும் இதே போன்று நடக்க கூடாது என திட்டவட்டமாக இருந்தனர்.
ஆனாலும் ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டனர். அதன் பிறகு அந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் சன் டிவி கோரிக்கை வைத்திருந்தது. அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜெயிலர் ஆடியோ நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பரவியது.
கூலி நிகழ்ச்சியில் டிஆர்பியை ஏற்ற சன் டிவி போட்ட திட்டம்
குறிப்பாக ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி ஹைலைட். இதனால் கூலி நிகழ்ச்சியின் வீடியோக்கள் எந்த சமூக வலைத்தளங்களிலும் வெளியிட முடியாத அளவுக்கு சன் நெட்வொர்க் வேலை பார்த்து இருக்கிறது. மேலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சன் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
அதுவும் ரஜினி இந்த விழாவில் படுபயங்கரமாக பேசியிருக்கிறாராம். இது கூலி படத்திற்கு கண்டிப்பாக ஒரு ஹைப்பை ஏற்றும் என்று சொல்லப்படுகிறது. மேலும் கூலி படத்தை காட்டிலும் இந்த விழாவை வைத்தே கலாநிதி நல்ல டிஆர்பிஐ பெற இருக்கிறார்.
ஏனென்றால் எந்த வீடியோக்களும் வெளியில் கசியாமல் இருப்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இந்த நிகழ்ச்சியை பார்க்க காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு செம விருந்தாகத்தான் இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது.