ஹீரோயின் கையில் தற்போது 4 முதல் 5 படங்கள், இன்னும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள் என ஏகபோகமாய் நடிகை ஒருவருக்கு ஜாக்பாட் அடித்து வருகிறது. இது மற்ற நடிகைகளாகிய ராஷ்மிகா மந்தனா, தூசரா விஜயன், சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற நடிகைகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
எல்லா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அந்த நடிகை தான் வேணும் என அடம் பிடித்து வருகிறார்கள். அம்மணி நடித்தது ஒரே ஒரு படம் தான். அந்தப் படத்திலேயே மொத்த ஹீரோக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும், அதிக பரீட்சையமாகியுள்ளார், தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் வருகிறார்.
அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். சுமார் 40 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 150 கோடிகள் வசூலித்தது. இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் கயாடு லோகர். இப்பொழுது அவர் காட்டில் தான் அடை மழை கொட்டி வருகிறது.
ஆரம்பத்திலேயே கயாடு லோகரை பற்றிய நிறைய தப்பான வதந்திகள் பரவினாலும், அதையெல்லாம் படிக்கட்டுகளாய் மாற்றி இன்று அடுத்த அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார். இவர் ஒரு நைட் பார்ட்டி அட்டென்ட் செய்வதற்கு சுமார் 40 லட்சம் வாங்குகிறார் என்று அவரைப் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டது
இருந்தாலும் அதையெல்லாம் பொறுப்பேடுத்தாமல் இன்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஒன்றரை கோடிகள் சம்பளம் கேட்கிறாராம் சிம்புவுடன் உடன் STR 49 படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். பிஸி ஷெடியூல் காரணமாக தனுஷ் உடன் D54 படம் கைவிட்டு போனது.