Netflix : ஓடிடியில் வெளியாகும் படங்களில் ரசிகர்கள் அதிக முறை பார்த்த படங்களில் டாப் 10ல் இந்திய படங்களை பார்க்கலாம். இதில் கடைசி இடத்தை இந்தியில் வெளியான ஜனனே ஜான் பெற்றிருக்கிறது. இதில் கரீனா கபூர், ஜெய்தீப் அஸ்லாவத் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. அடுத்ததாக ஒன்பதாவது இடத்தில் 22 பார்வையாளர்களைக் கொண்டு லியோ படம் கைப்பற்றி இருக்கிறது. லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
எட்டாவது இடத்தில் சைத்தான் படம் இருக்கிறது. அஜய் தேவகன், ஜோதிகா மற்றும் மாதவன் ஆகியோர் நடிப்பில் திகில் படமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பைட்டர் படம் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.
நெட்பிளிக்சில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட டாப் 10 இந்திய படங்கள்
தபு, கரீனா கபூர் மற்றும் பலர் நடிப்பில் விமான பணிப்பெண் சாகசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட crew படம் ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஹிந்தியில் கிரண் ராவ் இயக்கத்தில் லாபட்டா லேடிஸ் என்ற நகைச்சுவை கலந்த படம் 26 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
ரன்பீர் கபூர் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் நான்காவது இடத்தில் இருக்கிறது. விஜய் சேதுபதியின் மகாராஜா படம் 27 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
அட்லி மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் படம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடத்தில் 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ராஜமவுலியின் RRR படம் பிடித்திருக்கிறது. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தனர்.