தமிழ் சினிமாவில் இப்போது பேசப்படும் இரண்டு பெயர்கள் நெல்சன் திலீப்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ். இவர்களை ஒப்பிட்டு ரசிகர்கள் பல comparison-களை செய்து வருகின்றனர். இருவரும் திறமையானவர்கள்தான் ஆனாலும், அவர்களின் அணுகுமுறை, script handling, comedy sense, மற்றும் marketing வரை பல வேறுபாடுகள் இருக்கின்றன.
Script Clarity vs Confusion:
நெல்சன்க்கு எப்போதும் ஒரு solid shooting script இருக்கும். அதனால் set-ல confusion குறைவாக இருக்கும். ஆனால் லோகேஷ் பக்கம் பார்த்தால், அவர் shooting script-ஐ பின்பற்றுவதில்லை. சில நேரங்களில் edit table மேல் தான் இறுதி முடிவு இருக்கும். இதுவே project மற்றும் confusion அதிகமாக இருக்கும்.
Time Efficiency vs Time Consuming:
நெல்சன் ஒரு time-efficient ரைட்டர். அவர் screenplay-ஐ sharp-ஆ முடித்து விடுவார். லோகேஷ் பக்கம் பார்த்தால், perfection-ஐ நாடுவதாலோ அல்லது clarity இல்லாததாலோ அதிக நேரம் எடுத்துக்கொள்வார். இதனால் production side-ல challenges அதிகம் இருக்கும்.
Comedy vs Intensity:
கதை எவ்வளவு weak ஆனாலும் நெல்சன் தனது காமெடி timing-ஆல் அதை சரி செய்து விடுவார். அதுவே அவர் படங்களின் ப்ளஸ். ஆனால் லோகேஷ் படங்கள் “hit or miss” type. அதாவது சில படங்கள் cult hit ஆகும், சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வேலைக்கு ஆகாது காமெடியும் வராது.
Mistakes-ஐ Handle செய்வது:
நெல்சன் தனது தவறுகளை open-ஆ ஏற்றுக்கொள்வார். ஆனால் லோகேஷ் பெரும்பாலும் தனது தவறை accept செய்யாமல், justification கொடுக்க முயற்சிப்பார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இது முக்கியமான இயக்குனர்களுக்கு நல்லது அல்ல.
Story Adaptation & Marketing:
நெல்சன், Breaking Bad மாதிரியான ஒரு simple one-liner-ஐ எடுத்தாலும் அதை தனக்கே உரிய comedy, quirky treatment-ஆல் அசால்ட் செய்து விடுவார். லோகேஷ், பல கதைகளிலிருந்து elements எடுத்து borrow பண்ணுவார். ஆனால் எல்லா நேரமும் அதை வைத்து சரி செய்ய முடியவில்லை.
Marketing பக்கம் வந்தால் நெல்சன் தனது hilarious promos-களில் actively contribute பண்ணுவார். அவை படத்திற்கு ஒரு extra hype கொடுக்கும். ஆனால் லோகேஷ் அதிகம் marketing-ஐ depend பண்ணுவது அவரது team மேல் உள்ள நம்பிக்கைதான்.
Characterization Style:
நெல்சன் அவர் படங்களில் கதாபாத்திரங்கள் சில நேரங்களில் முட்டாள்தனமாக நடந்தாலும், அதை intelligent screenplay சரி செய்யும். லோகேஷ், “acts intelligent but makes dumb films” என்று விமர்சகர்கள் சொல்வது, அவர் கதாபாத்திரங்கள் எல்லாம் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் திரைக்கதை லாஜிக் குறைவாக இருக்கும்.