Ajith : அஜித் நடிப்பில் இந்த வருடம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் வெளியானது. இப்போது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் கூட்டணி போட இருக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில் 25 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் இயக்குனர் ஒருவர் கூட்டணி போட இருக்கிறார். பொதுவாகவே அஜித் ஒரு இயக்குனருடன் பணியாற்றினால் அடுத்த அடுத்த படங்களிலும் அதே இயக்குனர் உடன் கூட்டணி போடுவது வழக்கம் தான்.
சிறுத்தை சிவா, ஹெச் வினோத் வரிசையில் இப்போது ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்திருக்கிறார். இப்படி இருக்கையில் அஜித்துக்கு தீனா என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். ஆனால் அதன் பிறகு இந்த கூட்டணி தற்போது வரை அமையாமல் இருக்கிறது.
25 வருடங்களுக்கு பிறகு அஜித் உடன் இணையும் இயக்குனர்
இதற்குக் காரணம் கஜினி படத்தின் கதையை ஆரம்பத்தில் அஜித் இடம் கூறி இருக்கிறார். ஆனால் திடீரென சூர்யாவை வைத்து படம் எடுத்துவிட்டார். ஆகையால் அஜித் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இடையே மனக்கசப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் நண்பர்கள் தின விழாவில் அஜித் தன்னுடைய இயக்குனர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். சுரேஷ் சந்திரா தான் அஜித் படம் பேசி ஏஆர் முருகதாஸை சந்திக்க வைத்திருக்கிறார்.
மேலும் அப்போதே ஏஆர் முருகதாஸ் ஒரு கதையும் சொல்லிய நிலையில் அஜித் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். ஆகையால் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் மற்றும் முருகதாஸ் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.