Kannappa X Review : புராணக் கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சிவபக்தியை வெளிப்படுத்தும் விதமாக முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது கண்ணப்பா படம்.

கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு, சிவபெருமானாக அக்ஷய் குமார், பார்வதியாக காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் பிரபாஸ், மோகன்லால் போன்றோர் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை பற்றிய ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

படத்தில் கண்ணப்பாவாகவே விஷ்ணு மஞ்சு வாழ்ந்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆரம்பத்தில் கடவுள் மீது பக்தி இல்லாமல் இருக்கும் கண்ணப்பா தனது கண்களை அம்பு வைத்து பிடுங்கி எடுக்கும் காட்சிகள் என் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

படத்தில் கண்ணப்பாவை சோதிக்க அனுப்பப்படும் ருத்ரா கதாபாத்திரத்தில் பிரபாஸ் வரும் காட்சிகள் அல்டிமேட் ஆக அமைந்துள்ளது. அதுவும் பாகுபலி படத்தில் அவர் சிவனின் சிலையை தூக்கி வரும் காட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

மோகன் லாலின் கதாபாத்திரமும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் கிளைமேக்ஸ் காட்சிகளில் மஞ்சு விஷ்ணுவின் நடிப்பு அபாரம் ஆக இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பை இந்த படம் பெரும் என ரசிகர் பதிவிட்டு இருக்கிறார்.

படத்தில் ஒரு சில சிஜி குறைகள் இருக்கிறது. என்றால் இதுபோன்ற படங்களுக்கு பெரிய பட்ஜெட்டுகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் சில குறைகள் இருப்பதாக கூறப்படுகிறது.