Memes: சோசியல் மீடியா கடந்த ஒரு வார காலமாக மிகுந்த பரபரப்பாக இருக்கிறது. இளம் பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலையில் தொடங்கி திருபுவனம் இளைஞர் காவல் மரணம் வரை அனைத்துமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் இதற்காக வாய் திறக்காதது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நடந்த சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பாக நடிகர்கள் பொங்கி எழுந்தனர்.

ஆனால் இப்போது உங்கள் ஆவேசம் எல்லாம் எங்கே போச்சு. ஒருத்தர்கூட கண்டனம் தெரிவிக்கலையே ஏன் என நெட்டிசன்கள் அவர்களை ட்வீட் போட்டு கிழித்து தொங்க விடுகின்றனர்.

அதிலும் ஜெய் பீம் பட கதை இது சம்பந்தப்பட்டது தான். அப்படியெல்லாம் சினிமாவில் கோபம் பொங்க பேசிவிட்டு இப்போது சூர்யா அமைதியாக இருப்பது ஏன். படம் தியேட்டருக்கு வராது என்ற பயமா என கடும் விமர்சனங்கள் அவர் மீது இருக்கிறது.

அதேபோல் நடிகர் ஆர்யாவிடம் கூட இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் அவர் ஏதோ குவிஸ் நிகழ்ச்சி போல அடுத்து என கூறினார்.

இவர்கள் மட்டும் உள்ள எல்லா நடிகர்களும் கவனமாக இந்த கேள்வியை தவிர்த்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

அதே சமயம் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தங்கள் கோபத்தை காட்டி வருகின்றனர் படத்துல தான் நாங்க மீதி நியாயம் பேசுவோம்.
ஆனா சாரி நாங்க நிஜத்துல அப்படி கிடையாது என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதை போல் சோசியல் மீடியாவில் இன்னும் பல விவகாரங்கள் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.