Surya : நடிகர் சூர்யா அவர்கள் தற்போது “கருப்பு” பட ரிலீஸ் ஆகும் வரை இந்த படத்தை பற்றிய வேலையில் பிஸியாக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது “அகரம் பவுண்டேஷன்” வேலைகளையும் சிறப்பாக செய்து வருகிறார்.
சூர்யாவிற்கு ரீசண்டாக சில படங்கள் தோல்வியடைந்தாலும். அதையெல்லாம் பொருட்படுத்தாது அடுத்தடுத்த படத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் சூர்யா ஒன்றை கூறலாம்.
படத்தை ஆரம்பிக்க போறாங்க..
தற்போது வெளிவரவிற்கும் “கருப்பு” படம் , ரிசென்ட்டாக தோல்வியடைந்த படங்களுக்கெல்லாம் சேர்த்து வெற்றியை குவிக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “வாடிவாசல்” படம் தற்போது டிராப் என்ற தகவல் வந்து சூர்யாவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது இந்த வாடிவாசல் படத்தின் முக்கிய கதாபாத்திரம் சூர்யா என்றாலும் அதைவிட முக்கிய கதாபாத்திரம் “மாடு“. இந்த மாட்டை தேனியில் சில காலமாக இதற்கு லட்சக்கணக்கில் செலவழித்து அதை தயார்படுத்தி வருகிறாராம் கலைபுலி தாணு.
இந்த மாடு தற்போது தயாராக உள்ளதாம். அதனால் வாடிவாசல் படம் ட்ராப் கிடையாது. இதை மீண்டும் செய்து தர சூர்யா சம்மதித்துள்ளாராம். ஆக வெற்றிமாறனும் சூர்யாவும் இணைந்து வாடிவாசல் படம் பண்ண போவதாக கூடிய விரைவில் அப்டேட் வெளியாக உள்ளது.
சூர்யாவிற்கு கொண்டாட்டம், STR-க்கு திண்டாட்டம்..
அப்போ வடசென்னை 2 படம் தற்போது எடுக்கப் போவதில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே STR- க்கும் வெற்றிமாறனுக்கும் இடையே சில பிரச்சனைகள் போய்க் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இதனால் “வாடிவாசல்” படத்தை பண்ண போகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இப்போது சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், வடசென்னை-2வில் STR எதிர்பார்த்த STR ரசிகர்களுக்கு திண்டாட்டமாகவும் இருக்கப்போகிறது.