சரியாக சொல்லப்போனால் கூலி படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் மட்டுமே இருக்கிறது. சொன்ன நேரத்திற்கு, சொல்லி வைத்தார் போல் வேலையை முடித்து கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனால் சன் பிக்சர்ஸ்க்கு எந்த ஒரு தலைவலியும் இல்லாமல் காய் நகர்ந்து வருகிறது.
தயாரிப்பாளர்களின் இயக்குனர் லோகேஷ் என்ற ஒரு பெயரை வாங்கிவிட்டார். சொல்லப்போனால் கூலி படம் அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள ஏழாவது திரைப்படம் . ஆரம்பத்தில் மாநகரம் படத்திற்கு முன்பு அவியல் என்ற ஒரு படத்தை நண்பர்களுடன் சேர்ந்து இயக்கி உள்ளனர்.
ஆரம்பத்தில் கூலி படத்திற்கு சேலஞ்ச் இருந்தாலும் லோகேஷ் அதை அருமையாக கையாண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக இவர் போட்ட ஸ்கெட்ச்கள் அனைத்தும் கரெக்டாக வொர்க் அவுட் ஆனதால் சொன்ன நேரத்திற்கு இந்த படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார்
நல்ல டீம், 11 வருடமாய் ஒன்றாக வேலை செய்யும் அறிமுகமான நண்பர்கள், எடுக்கிறது எல்லாம் கேங்ஸ்டர் மூவி என்பதால் ஸ்கிரிப்ட் ஒர்க் எளிது. இதைத்தான் லோகேஷ் விரும்புவார் என புரிந்து கொண்ட டீம், படத்தில் கிராபிக்ஸ் ஒர்க் இல்லை, இது போன்ற பல காரணங்களால் வேலை எளிதாக இருந்துள்ளது. கொடுத்த டேட், பட்ஜெட், ரிலீஸ் தேதி என எல்லாத்தையும் கரெக்டா செய்து சன் பிக்சர்ஸ்சை மிரட்டி விட்டாராம்.
ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் இடம் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். அதனால் பிரஷர் இல்லாமல் வேலை செய்ய முடிந்ததாக கூறியுள்ளார். இந்த படத்திற்கு மொத்தமாக அவர் 18 மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். இதில் ஐந்து மாதங்கள் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைக்காகவும் ஒதுக்கி உள்ளார்.