Sasikumar: டூரிஸ்ட் ஃபேமிலி பட வெற்றிக்கு பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரீடம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் உடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ், போஸ் வெங்கட் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதன் பிரமோஷன் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற போது சசிகுமார் ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கல்லூரிகளில் பல பிரமோஷன் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மாணவர்கள் படிக்க தான் வந்திருக்காங்க. அங்க போய் என்னோட படத்தை பாருங்க என்று விளம்பரப்படுத்த மாட்டேன்.
சசிகுமார் சொன்னது கேட்டுச்சா நாயகர்களே
அப்படி மிஸ் யூஸ் செய்வது தவறு. இதற்கு முன்பு நந்தன், டூரிஸ்ட் பேமிலி படங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. நல்ல வேளை தப்பித்து விட்டேன். இந்த பட இயக்குனர் கூட என்னிடம் அது பற்றி கேட்கவில்லை.
ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒன்று நடந்தால் அதை தயாரிப்பாளரின் கட்டாயத்திற்காக மட்டும்தான் இருக்கும். என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்பது இருக்காது என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த கருத்துக்கு அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அதேபோல் மற்ற ஹீரோக்கள் கூட இவருடைய ஸ்டைலை பின்பற்றலாம். கல்வி நிறுவனங்களை எதற்காக தொந்தரவு செய்ய வேண்டும் என்கின்றனர் இணையவாசிகள்.
சமீபத்தில் கூட தக் லைஃப் இசை வெளியீட்டு விழா பிரபல கல்லூரியில் நடைபெற்றது. அதையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் சசிகுமாரை பாராட்டுகின்றனர்.
ஆனால் முன்னதாக சுந்தர பாண்டியன் படத்தை சசிகுமார் கல்லூரியில் ப்ரமோஷன் செய்திருந்தார். அதன் தயாரிப்பாளரும் இவர் தான் என்பது கூடுதல் தகவல்.