Movie : ஒரு பிரபலத்தை வைத்து படம் எடுக்கும்போது அது நிச்சயம் வெற்றி பெரும் என்ற எண்ணத்தில் தான் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட்டில் படத்தை எடுக்க தொடங்குகிறார்கள்.
ஆனால் எல்லா தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் நினைத்த மாதிரி அந்த படம் வெற்றியில் முடிவதில்லை. சில சமயம் தோல்வியைத் தழுவி மக்களிடையே, எதிர்மறையான கருத்துக்களையும் பெறுகிறது.
இது புதுசா இருக்கே!
ஆன்மீக திரைப்படம் என்றாலே பழைய வரலாற்று கதை மற்றும் மரபுக் கதைகள் நிறைந்த திரைப்படத்தை தான் இதுவரைக்கும் நம்ம பார்த்திருப்போம். ஆனால் அன்மையில் தெலுங்கில் வெளியான கண்ணப்பா என்ற திரைப்படம் ஒரு புது முயற்சி கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
முக்கிய பிரபலங்கள் யார்?
முகேஷ் குமார் சிங் இயக்கிய இத்திரைப்படத்தில் முக்கிய பிரபலமான விஷ்ணு மஞ்சு மற்றும் மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ளனர். அதிரடியாக ஆன்மீக கதையை மையமாக கொண்ட இத்திரைப்படம் நான்கு நாட்களில் ரூ. 25.9 கோடி வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.
ரசிகர்கள் சொல்லுவது…
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என கிட்டத்தட்ட நான்கு மொழிகளில் வெளியான திரைப்படம் முதல் நாளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மஞ்சுவாரியரின் நடிப்பை பார்த்தால் கையெடுத்து கும்பிடலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வசூல் விவரம்..
நாள் 1 – ₹9.35 கோடி
நாள் 2 – ₹7.15 கோடி
நாள் 3 – ₹6.9 கோடி
நாள் 4 – ₹2.3 – ₹2.5 கோடி
ஒன்னும் பிரயோஜனம் இல்லை..
டாப் பிரபலங்கள் நடித்துமே படம் ஹிட் ஆகவில்லை. கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவான படத்தில் தற்போது வசூலில் 30% கூட தொட முடியாமல் திணறும் கண்ணப்பா திரைப்படம்.