Vadivelu: வடிவேலு இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான். ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு இவர் செய்த உதவி எல்லோரும் அறிந்தது தான்.
ஆனால் அந்த நன்றியை மறந்து விட்டு அவரையே எதற்கும் துணிச்சல் வடிவேலுக்கு வந்தது தான் ஆச்சரியம். அதன் காரணமாக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் கிடையாது.
சினிமாவை விட்டு சொந்த ஊருக்கு போய் பல வருடம் கழித்து தான் மீண்டும் வந்தார். இதற்கு முக்கிய காரணம் அப்போது திமுக கட்சிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்ததுதான்.
வடிவேலுவை பகடை காயாக வைத்து கேப்டனை ஓரம் கட்ட பல சதி நடந்தது. அதற்கு விலை போன வைகைப்புயல் பிரச்சாரம் என்ற பெயரில் தன்னுடைய வன்மத்தையும் தீர்த்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
பதவி ஆசைக்காக விலை போன வடிவேலு
அதிலும் ஒரு ஆதாயம் இருந்திருக்கிறது. அதாவது இந்த தேர்தலில் ஜெயித்து விட்டால் உங்களுக்கு எம்பி பதவி தருகிறோம் என கட்சி மேலிடம் சொல்லி இருக்கின்றனர். அதற்கு ஆசைப்பட்ட வடிவேலு விஜயகாந்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்.
ஆனால் முடிவு தோல்வியான நிலையில் சொந்த ஊருக்கே ஓடிப்போகும் நிலைமை அவருக்கு ஏற்பட்டது. இதை இயக்குனர் வி சேகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் தேவையில்லாத வேலை.
ஒருவேளை தோத்துட்டா சினிமா வாய்ப்பை நெனச்சு கூட பார்க்க முடியாது என்று சொன்னேன். ஆனால் வடிவேலு கேட்கல. அதன் பிறகு ஆள் அட்ரஸ் தெரியாமல் போய்விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படியே பதவி ஆசைக்காக இருந்த நல்ல பெயரை எல்லாம் வடிவேலு கெடுத்துக் கொண்டார். தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவருக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. முன்பு போல் அவருடைய நகைச்சுவையை ரசிகர்கள் ரசிக்கவில்லை. அதனால் கேரக்டர் ரோல் பக்கம் திரும்பி விட்டார்.