தமிழ் சினிமா உலகில் இசை என்றால் அது எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவில் வராமல் இருக்க முடியாது. “மெல்லிசை மன்னன்” என்று அன்பாக அழைக்கப்படும் இவர், தனது அசாதாரண இசைத் திறமையாலும், மனதைக் கொள்ளை கொண்ட மெட்டுகளாலும் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து வருகிறார்.
அதில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்தார். பிரபல நடிகர் நாகேஷ் நடித்திருந்த சர்வசுந்தரம் என்ற படத்தில் ஒரு பாடல் உடனடியாக தேவைப்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது கவிஞர் பாடல் வரிகளை விரைவாக எழுதிக் கொடுத்ததும், எம்.எஸ்.வி அந்த பாடலுக்கு வெறும் 10 நிமிடங்களில் இசை அமைத்துவிட்டார்.
இது சாதாரண விஷயம் அல்ல. ஒரு பாடலுக்கான ராகம், சுருதி, இசைக்கருவிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் அமைத்து, அதை இசைக்குழுவுடன் சேர்த்து உயிரூட்டுவது எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்கள் இதை கேட்டால் வியக்காமல் இருக்க முடியாது. ஆனால் எம்.எஸ்.வி க்கு அது எளிய விஷயமாக இருந்தது.
சங்கர் கணேஷ் கூறியதாவது
“அந்தக் காலத்தில் ரெக்கார்டிங் க்கு நேரம் குறைவாக இருந்தாலும், எம்.எஸ்.வி யின் கற்பனை சக்தி அசாதாரணமாக இருந்தது. 10 நிமிடத்தில் அவளுக்கென பாடலை ரெடி செய்து, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த பாடல் ஹிட்டாகி நாகேஷ் நடித்த காட்சிகளை இன்னும் உயர்த்தியது” என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் அக்காலத்தில், எம்.எஸ்.வி யின் திறமையான கற்பனை சக்தி, இசை அறிவு, வேகமான சிந்தனை அவரை மற்ற இசையமைப்பாளர் களிலிருந்து வேறுபடுத்தியது. சர்வசுந்தரம் படத்தின் அந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நாகேஷின் காமெடி டைமிங்கும், எம்.எஸ்.வி யின் மெட்டுகளும் இணைந்து ஒரு மாபெரும் மேஜிக்காக மாறியது.
இன்றும் அந்த காலத்து ரசிகர்கள், “எம்.எஸ்.வி இசையமைத்த பாடல்களை கேட்கும்போது ஒரு விசேஷ உணர்வு வருகிறது” என்று பெருமையாகச் சொல்கிறார்கள். அவரது பாடல்கள் காதல், காமெடி, குடும்பம், டூயட், டான்ஸ் – எந்த வகை பாடலாக இருந்தாலும் மனதில் நிற்கும்.