Memes: தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பல விஷயங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் விஜயின் பேச்சு கூட இப்போது வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். அதில் பாஜகவுடன் கூட்டணி என்பது கிடையாது என்பதை ஆணித்தரமாக தெளிவுபடுத்தி விட்டார்.

அதேபோல் பரந்தூர் விமான நிலைய பிரச்சனை குறித்தும் பேசியிருந்தார். அந்த மக்களை முதல்வர் ஏன் சந்திக்க மறுக்கிறார். அப்படி சந்திக்கவில்லை என்றால் அவர்களை அழைத்துக் கொண்டு நானே தலைமைச் செயலகத்துக்கு வந்து உங்களை சந்திப்பேன் என ஒரே போடாக போட்டார்.

இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை விஜய் கட்சியினர் பெருமையோடு ஷேர் செய்து மக்களை சந்திக்க களத்துக்கு வாங்க அப்படின்னு சொன்னீங்க.

ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எங்க அண்ணன் தலைமை செயலகத்துக்கே வருவாரு என கெத்து காட்டி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இதை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

