Vijay : சினிமாவை விட்டு 2024 அரசியலில் களமிறங்கப் போகிறேன் என்று விஜய் சொன்னது நம் அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்தான்.
கிட்டத்தட்ட 300 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த ஒரு சினிமா நடிகர் திடீரென மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலில் குறித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. விஜயின் இந்த முடிவுக்கு பல திரை பிரபலங்கள் ஆதரவளித்தனர்.
எல்லா செய்தி சேனலிலும் விஜய் பற்றி தான் ஒளிபரப்பானது. விஜய்க்கு அரசியலில் சேர்ந்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம் தான். சினிமாவில் ரசிக்கப்பட்ட ஒரு ஹீரோ நிஜத்தில் களமிறங்கும் போது நிறைய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடிவிட்டனர்.
சமீபத்தில் நகை திருட்டு வழக்கில் மர்மமாக இறந்த அஜித் குமார் வீட்டிற்கு விஜய் சென்று ஆறுதல் கூறியதும் மக்களிடையே பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் 2026 தேர்தலில் அரசியலில் களம் இறங்குவது அதிமுகவா? திமுகவா? அல்லது தளபதியின் தவெகவா? என்ற பேச்சு தான் இப்போது உலாவி வருகிறது.
வலைப்பேச்சு பிஸ்மின் கருத்து..
“நிச்சயம் விஜய் எந்த கூட்டணியும் வைத்துக் கொள்ள மாட்டார் என்பது உறுதி. அவர் முதல்வராக வேண்டும் என்றுதான் கட்சியை தொடங்கி இருக்கிறார். அப்படி இருக்கையில் விஜய் எப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணி போடுவார். பொதுவாகவே பரந்தூர் விவாகரத்தில் விஜய்க்கு சுத்தமாக தெளிவு இல்லை-வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி” இவரின் இந்த பேச்சு வலைத்தளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.