Karthi : அப்பா, அண்ணன் என குடும்பத்தில் இரண்டு பேர் சினிமாவில் இருக்கும்போது, தம்பி இன்னும் காணவில்லையே என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பருத்தி வீரன் திரைப்படத்தில் பயங்கரமாக என்ட்ரி கொடுத்தார் கார்த்திக்.
முதல் படத்திலேயே தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கார்த்தி. கிராம சாயல் கொண்ட முகம், மதுரை பேச்சு, ஸ்டைலான தாடி இப்படி படத்தில் தனக்கென்று ஒரு மதிப்பை பெற்றார். இதற்கு இணையாக பிரியாமணி நடித்திருப்பது படத்திற்கு இன்னும் ஒரு வரவேற்பு அளித்தது.
பருத்திவீரன் படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது. இப்படி படத்தின் பெருமைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போலாம்.
கிடைத்த விருதுகள்..
அந்தப் படத்திற்கு பல கைதட்டுகள் மட்டும் கிடைக்கவில்லை, பாடல் மற்றும் படத்தின் கருத்தில் கொண்டு பல விருதுகளும் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது பருத்திவீரன் படத்தைப் பற்றி பிரியாமணி பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கதையே தெரியாது..
கடைசி வரைக்கும் பருத்திவீரன் கதை எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் இல்லை கார்த்திக் கும் தெரியாது. சூட்டிங் ஸ்பாட் வந்து தான் இந்த சீன்ல நடிக்கணும் சொல்லுவாங்க. சில நேரத்தில் கதை கூட சூட்டிங் ஸ்பாட்டில் தான் யோசிப்பாங்க- நடிகை பிரியாமணி