எதிர்நீச்சல் தொடர்கிறது விறுவிறுப்பாக சென்றாலும் அநியாயம் செய்யும் குணசேகரன் பக்கம் மட்டுமே வெற்றி கிடைத்து வருகிறது. இல்லத்தரசிகள் பல பேருக்கு இது எரிச்சலை கிளப்பி உள்ளது. தன் மனைவி ஈஸ்வரியை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி இருவருக்கும் எங்கள் கல்யாணத்திற்கு முன்பே பழக்கம் இருந்தது. அது இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது இதனால் தான் எங்களுக்குள் சண்டை சச்சரவு என போலீஸ்காரர்களிடம், இல்லாதவையும் பொல்லாதவையும் சொல்லி முகம் சுழிக்க வைக்கிறார் குணசேகரன்.
ஜீவானந்தமும், ஜனனியும் சேர்ந்துதான் ஈஸ்வரியை தாக்கி இந்த நிலைமைக்கு ஆக்கிவிட்டார்கள் என மொத்த பழியையும் தூக்கி அவர்கள் இருவரும் மீது போட்டுள்ளார். இதனால் போலீஸ்காரர்கள் ஜனனியை கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். அங்கே இவர்களுக்கு எதிராகவே பல ஆதாரங்கள் திரட்டப்படுகிறது.
குணசேகரனின் வக்கீல் கோர்ட்டில் சம்பந்தமில்லாமல் முடிச்சு போட்டு இவர்களை கதி கலங்க செய்கிறார். ஜனனி தப்பிக்க வேண்டுமென்றால், மருத்துவமனையில் இருக்கும் ஈஸ்வரிக்கு நினைவு வரவேண்டும் அல்லது தலைமறைவாய் இருக்கும் ஜீவானந்தம் வந்து கோர்ட்டில் நிற்க வேண்டும், இல்லையென்றால் ஜனனிக்கு ஜெயில் உறுதி.
இவ்வளவு சூழ்ச்சிகளையும் செய்தது குணசேகரன் தான். ஆனால் அவர் பரோலில் வெளிவந்த கைதி. இந்த லாஜிக் கூட இல்லாமல் அவர் பேச்சை கேட்டு காவல்துறை மற்றும் நீதிபதி இந்த வழக்கை எடுத்தது தப்பு. இதைப் பற்றி கோர்ட்டில் யாரும் வாய் திறக்கவில்லை. இந்த அடிப்படை லாஜிக் இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார் ஜீவானந்தம்.