Vijay : சினிமாவில் இருந்து அரசியலில் களம் இறங்கிய விஜய் 2026 தேர்தலில் ஜெயிப்பாரா?
விஜய் சினிமாவின் புகழ்பெற்ற தற்போது அரசியலுக்கு வந்ததால் நிறைய ரசிகர்கள் கூட்டம் விஜயின் அரசியலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் சினிமாவில் நிறைய நடிகர்களும் விஜய்க்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் சப்போர்ட் பண்ணி வருகிறார்கள்.
எங்களுடன் கூட்டணி போடுங்க என்று சொன்ன பாஜகவுக்கு எந்த காலத்திலும் அது நடக்காது என்று முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதையடுத்து நம் ஆட்சி ஜெயிக்குமா? ஜெயிக்காதா என்று அச்சத்தில் திமுகவும், அதிமுகவும் பேதியில் இருக்கிறார்கள். என்னதான் நாம் பல வருடம் ஆட்சி செய்தாலும், சினிமாவில் கொடி கட்டி பறந்த விஜய்க்கு தான் மதிப்பு என்ற எண்ண ஓட்டமும் எதிர்க்கட்சிக்கு இருந்து வருகிறது.
முதலில் பதவிக்கு வரட்டும்..
நடிகர் சரவணன் ஒரு முந்தைய கால பேட்டியில் ” சினிமாவில் ஹீரோவாக வளர ஒருவனுக்கு ஆக்டிங் ஸ்கில் முக்கியம்” என்று பேசி இருப்பார். இந்தப் பேச்சு விஜய்க்கும், சரவணனுக்கும் எதிர்மறையான பகையை ஏற்படுத்தியது. ஆனால் நேரடியாக இவர்கள் சந்திக்கும் போது அந்த சங்கடம் இல்லை என்பது தெரிய வருகிறது.
அரசியலில் உங்களுடைய சப்போர்ட் யாருக்கு என்ற கேள்விக்கு :
“அரசியலில் எனக்கு விஜய் தம்பி ஜெயிக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இதுவரைக்கும் சரியாகத்தான் பண்ணிட்டு வருகிறார். முதலில் அவர் ஆட்சிக்கு வந்து செஞ்ச பிறகு விமர்சனம் செய்யலாம்”.