Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நித்தேஷ் இறந்துவிட்டார் என்று தெரிந்த நிலையில் இனியா பயப்பட ஆரம்பித்து விட்டார். அந்த நேரத்தில் இந்த விஷயம் செய்தி மூலம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் இனியா பயத்தில் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எல்லா உண்மையும் சொல்லிட்டு வருகிறேன் என கிளம்புகிறார்.
அப்பொழுது கோபி எதுவும் பண்ண வேண்டாம் அம்மாவையும் அண்ணனையும் கூட்டிட்டு கிராமத்துக்கு போயிட்டு வா என்று சொல்கிறார். அப்பொழுது கோபியிடம் தனியாக போக மாட்டோம், நீங்களும் வாங்க என்று பசங்க கூப்பிடுகிறார்கள். அதற்கு கோபி எல்லோரும் போனால் பிரச்சினை பெருசாகிவிடும், நான் இங்கே இருந்து சமாளிக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார்.
உடனே ஈஸ்வரி நான் என் பையனை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நான் இங்கே தான் இருப்பேன் என்று கோபிக்கு சப்போர்ட்டாக ஈஸ்வரி இருக்கிறார். பிறகு எல்லோரும் கிளம்பிய நிலையில் போலீஸ், பாக்யா வீட்டிற்கு வந்து இனியாவை பற்றி விசாரிக்கிறார்கள். அதற்கு கோபி, இனியவை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்ததால் போலீஸ் கோபியை விசாரிப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகிறார்கள்.
கோபியை போலீஸ் கூட்டிட்டு போனதை நினைத்து ஈஸ்வரி தனியாக இருந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக செல்வி மற்றும் ஆகாஷ் வருகிறார்கள். வந்ததும் ஈஸ்வரி கோபப்படாமல் எல்லா கஷ்டத்தையும் செல்வி இடம் சொல்லி பீல் பண்ணி அழுகிறார். செல்வியும் அழுது ஈஸ்வரியை சமாதானப்படுத்துகிறார்.
அடுத்ததாக கோபி ஜெயிலுக்கு போன விஷயம் தெரியாமல் பாக்யா இனியா எழில் செழியன் கிராமத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் இனிய பயத்துடன் இருக்கும் பொழுது அனைவரும் சமாதானப்படுத்தி ஆறுதலாக பேசுகிறார்கள். நித்தீஷ் இறந்ததற்கும் இனியாவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. பின்னணியில் இருந்து சூழ்ச்சி பண்ணியது சுதாகர் தான்.