Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளிய வந்த நித்தீஷிடம் எப்படியாவது இனியவை பார்த்து சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வா என்று சுதாகர் சொல்லி விடுகிறார். இதனால் நித்தீஷ், இனியாவின் ஆபீஸ்க்கு போய் இனியாவை பார்த்து பேசுவதற்கு முயற்சி எடுத்தார். ஆனால் இனியா பேச முடியாது என்று சொல்லியதால் அங்கே பிரச்சினை பண்ணும் விதமாக நித்திஷ் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோபி செழியன் மற்றும் எழில், மறுபடியும் இனியாவிற்கு இந்த மாதிரி தொந்தரவு வரக்கூடாது என்று முடிவு பண்ணி சுதாகர் வீட்டிற்கு போதுமாக போகிறார்கள். அங்கு நித்தேஷ் சந்திரிகா மற்றும் சுதாகர் அனைவரும் இருந்த பொழுது அவர்களிடம் கோபமாக கோபி மற்றும் இனியாவின் அண்ணன்கள் பேசுகிறார்கள்.
பிறகு நித்தேசும் கோவப்பட்ட நிலையில் அங்கே அடிதடி ஆகிவிட்டது. பிறகு கோபி, மகன்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வந்த விடுகிறார். ஆனாலும் இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காக பாக்கியாவிடம் பேசி எப்படியாவது இனியவை கூட்டிட்டு வரவேண்டும் என்று சுதாகர் ஹோட்டலுக்கு போகிறார். அங்கே போனதும் சுதாகரை பார்த்து பாக்கிய கோபமாக பேசினார்.
பிறகு சுதாகரும் கோவப்பட்ட நிலையில் லோக்கல் கவுன்சிலர் வந்து பார்க்கும் பொழுது பாக்யாவுக்கு ஏதோ பிரச்சனை என்பதற்கு ஏற்ற மாதிரி முடிவு பண்ணி சுதாகரிடம் சண்டை போடுகிறார். அப்பொழுது பாக்கிய, நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் எதுவும் பேச வேண்டாம் என்று லோக்கல் கவுன்சிலரிடம் சொல்கிறார். ஆனால் லோக்கல் கவுன்சிலர் பாக்கியாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக சுதாகரை திட்டி வெளியே அனுப்பி விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து இனி சுதாகர் மற்றும் நித்தீஷ் வந்து பேசக்கூடாது என்று முடிவு பண்ணும் இனியா தாலியை கழட்டி கொடுத்து விவாகரத்து பண்ண போகிறார். அடுத்து பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏற்ற மாதிரி இரண்டு பொண்டாட்டி இரண்டு கணவன் என்ற அடிப்படையில் இந்தியாவிற்கும் ஆகாசுக்கும் கல்யாணம் நடக்கும்.