Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா கோபிக்கு மட்டும் தெரிந்த விஷயம் தற்போது பாக்யாவுக்கும் தெரிந்து விட்டது. மறுபடியும் நித்திஷ் போ**தை பழக்கத்திற்கு அடிமையாகி போலீஸிடம் சிக்கிக்கொண்டார் என்ற விஷயம் கோபி இனியாவுக்கும் தெரிந்த நிலையில் இனியவை கோபி வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.
பாக்யா இனியா கோபி மூன்று பேரும் வீட்டுக்கு வந்து குழப்பத்தில் இருந்த பொழுது ஈஸ்வரி என்னாச்சு எல்லோரும் எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார். இனியவை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தாய், புகுந்த வீட்டிலிருந்து சொல்லாமல் இப்படி அடிக்கடி வரக்கூடாது வீட்டில் போய் விட்டுட்டு வா என்று கோபியிடம் ஈஸ்வரி சொல்லுகிறார்.
உடனே கோபி, இனியாவின் வீடு இனி இதுதான். வேற எங்கேயும் போக மாட்டாள் என்று சொல்லி நிலையில் ஈஸ்வரி எதற்காக இப்படி சொல்கிறாய் என்று கோபமாக கேட்கிறார். அந்த நேரத்தில் பதட்டமாக வந்த செழியன் டிவியை போட்டு காட்டி அதில் வரும் செய்தியை ஈஸ்வரியை பார்க்க வைக்கிறார். அதை பார்த்தது அதிர்ச்சியான ஈஸ்வரி, இதெல்லாம் உண்மையாக இருக்காது.
நம்ம எல்லோரும் சம்பந்தி வீட்டுக்கு போய் பார்க்கலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு பாக்கியம், நான் ஏற்கனவே பார்த்து பேசிட்டு வந்து விட்டேன். நித்தீஷ் மேல எந்த தவறும் இல்லை என்று சுதாகர் சொன்னதாக சொல்கிறார். அதன்பிறகு இனியா மற்றும் கோபி எல்லா உண்மையும் சொல்லி அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுகிறார்கள்.
இதனால் ஈஸ்வரி கதறி அழுது கொண்டு இடிந்து போய் உட்கார்ந்து விட்டார். பிறகு பாக்கியா இதை இப்படியே விடக்கூடாது சுதாகர் வீட்டில் போய் நான் கேட்டு வருகிறேன் என்று கோபமாக கிளம்புகிறார். கூடவே கோபியும் கிளம்பிய நிலையில் என்னை ஏமாற்றி ஹோட்டல் அபகரித்த இப்பொழுது சும்மா பார்த்துக் கொண்டு இருந்த மாதிரி இதுலயும் இருப்பேன் என்று நினைக்காதீங்க.
இதற்கான தண்டனை நான் வாங்கிக் கொடுத்தே தீருவேன் என்று சுதாகரிடம் பாக்யா சவால் விட்டுவிட்டு வந்துவிடுகிறார். அந்த வகையில் இனி சுதாகர் வீட்டிற்கு இனிய போக வாய்ப்பே இல்லை. நித்தேஷை விவாகரத்து செய்து வேலையில் கவனம் செலுத்தும் இனியாவிற்கு பக்கபலமாக ஆகாஷ் நிற்கப் போகிறார். அதனால் கடைசியில் ஆகாஷ் மற்றும் இனியா தான் ஒன்று சேருவார்கள்.