Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவை கல்யாணம் பண்ணிய நித்தேஷ் போ**தை பழக்கத்திற்கு அடிமையான விஷயம் கோபி இனியாவிற்கு மட்டும் தெரிந்தது. உடனே கோபி இனியவை வீட்டிற்கு கூட்டிட்டு கிளம்பிய நிலையில் இனியா, நான் கொஞ்ச நாள் இங்கே இருந்து பார்க்கிறேன். நித்தேஷ் எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டு எந்த பிரச்சினையும் பண்ணாமல் இருந்தால் நான் இங்கே இருப்பேன்.
எதுவுமே முடியவில்லை என்று எனக்கு தெரிந்து விட்டால் உடனே நான் உங்களிடம் சொல்கிறேன். அப்பொழுது என்னை கூட்டிட்டு போங்கள் என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் நித்தீஷ் எதைப் பற்றியும் யோசிக்காமல் தொடர்ந்து போ**தை பழக்கத்திற்கு அடிமையாகி வந்ததால் பெரிய பூகம்பம் வெடிக்கப் போகிறது.
அதாவது நிதேஷின் நடவடிக்கைகளை பார்த்து சுதாகர் மனைவியிடம் சண்டை போடுகிறார். அதற்கு மனைவி, இனியாவே நீங்கள் இவனுக்கு கட்டி வைத்ததில் இருந்து தான் இவன் பழைய மாதிரி இப்படி ஆகிவிட்டான். உங்களுக்கு பாக்யா ஹோட்டல் வேண்டும் என்று ஆசை அதற்கு இனியாவை என் பையனுக்கு கட்டி வைத்து அவருடைய வாழ்க்கையே பாழாக்கி விட்டது என்று சண்டை போடுகிறார்.
இதையெல்லாம் கேட்ட இனியாவிற்கு மிகப்பெரிய இடியாகிவிட்டது. அத்துடன் நித்தேசும், இனியாவே கீழே தள்ளிவிட்டு காயப்படுத்தியதால் எல்லாத்தையும் நினைத்து பார்த்து ஆபிஸ் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இனியா அப்செட்டில் இருக்கிறார். அந்த சமயம் பாக்கியா, இனியாவிற்கு ஃபோன் பண்ணி ஹோட்டலுக்கு இன்டர்வியூக்கு போற விஷயத்தை பற்றி சொல்கிறார். அப்பொழுது இனிய எந்தவித கஷ்டத்தையும் சொல்லாமல் பாக்யாவுக்கு நல்லபடியாக இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வா என்று வாழ்த்து சொல்கிறார்.
உடனே பாக்கிய அந்த ஹோட்டலுக்கு கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் இனியா, கோபிக்கு போன் பண்ணி ஆஃபீஸ்க்கு வாங்க என்று கூப்பிட்டு நடந்த விஷயத்தை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். பாக்கியா ஹோட்டலில் இருக்கும் பொழுது நித்தீஷ் போ**தை பழக்கத்தில் அடிமையாகி நண்பர்களுடன் இருந்ததால் போலீஸ் அனைவரையும் கூட்டிட்டு ஜெயிலுக்கு போவதே பாக்கியம் பார்க்கிறார்.
அதன்பிறகு பாக்கிய சுதாகருக்கு ஃபோன் பண்ணி தகவலை சொல்கிறார். உடனே கோபிக்கும் போன் பண்ணி சொல்ல போகும் பொழுது இனிய கூட இருந்ததால் பாக்கியா எதையும் சொல்லாமல் நேரடியாக சுதாகர் வீட்டிற்கு போய்விடுகிறார். வழக்கம்போல் சுதாகர் தேவையில்லாமல் பேசி பாக்கியாவை குழப்பி விடுகிறார். இந்த விஷயம் எல்லாம் செய்தி மூலம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் கோபி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
உடனே இனியா நித்தீஷ் மற்றும் சுதாகர் குடும்பத்தை பற்றி ஈஸ்வரி பாக்யா செழியன் என அனைவரது முன்னாடியும் வைத்து சொல்லி விடுகிறார். இதனால் பாக்கியம் மனம் உடைந்து போய் சுதாகரிடம் சண்டை போடுவதற்கு கிளப்பிவிட்டார். இவ்ளோ பிரச்சனைக்கு காரணம் கோபியின் அவசர முடிவு, ஆகஸை அடித்து துன்புறுத்தியது, செல்வி விட்ட கண்ணீர் போன்ற எல்லாத்துக்கும் பதில் சொல்லும் விதமாக தற்போது கோபி குடும்பம் சோகத்தில் இருக்கிறது.