Movie : திரையில் எந்த படம் வந்தாலும் மக்களின் மனதில் பெரிய ஆர்வத்தை தூண்டுகிறது. அதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது.
கற்பனை கதை..
மனிதர்களும், டைனோசர்களும் ஒரே உலகத்தில் வாழும் கதையை கொண்டு புதிய முயற்சியில் எடுக்கப்பட்டுள்ளது ஜூராசிக் வேர்ல்ட் படம்.
முந்தைய காலத்தில் எப்படி டைனோசர்கள் உலகத்தில் வாழ்ந்து வந்ததோ அதே மாதிரி நவீன முறையை கொண்டு மீண்டும் டைனோசர்களை புதுப்பிக்கிறார்கள்.
விஞ்ஞானம் எப்போதும் மனிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. இரட்டை டிஎன்ஏ கொண்டு ஒரு புதிய டைனோசரை உருவாக்குகிறார்கள். அவை பயங்கரமாக சிந்திக்க கூடிய முழு வடிவ டைனோசராக உருவாகிறது.
இப்படத்தில் ஒரு சிலர் இதை வரமாகவும், ஒரு சில பேரழிவுக்கான நெருடல் எனவும் யோசிக்க ஆரம்பிக்கின்றன.
இந்நிலையில், ஒரு இளம் ஜீனெடிக் விஞ்ஞானி, முன்னாள் ரேஞ்சர், மற்றும் ஒரு சிறுவனின் குடும்பம் இவர்கள் எல்லாம் சேர்ந்து இந்த பேரதிர்வை தடுக்கும் புது முயற்சியில் இறங்குகிறார்கள். இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக படம் ஓடுகிறது.
பயங்கரமான வசூல்..
இந்நிலையில் ஜுராசிக் வேர்ல்ட் என்ற இத்திரைப்படம் வெறும் 4 நாட்களில் கிட்டத்தட்ட $318.4M வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது.