Rajinikanth : ரஜினிகாந்த் படம் என்றாலே அனைவருக்குமே ஒரே கொண்டாட்டம்தான். தற்போது ரஜினி நடிப்பில் வெளிவருவிற்கும் படம் கூலி. இந்த படமானது இன்னும் 3 நாட்களில் திரைக்கு வரவிற்கும் நிலையில், ரிலீஸ்க்கு முன்பே பல சாதனையை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் “பாக்ஸ் ஆபீஸ்” கலெக்சன் இதுவரையில் இருந்தது 2.0 படம்தான், அதுவும் ரஜினி படம்தான். இதற்கு பிறகு அந்த சாதனையை முறியடிக்க ஒரு படம் வந்துகொண்டிருக்கிறது என்றால் அதுவும் ரஜினி நடித்த கூலி படம்தான்.
பாக்ஸ் ஆபீஸ் சாதனையை முறியடித்த கூலி..
அப்போ ரஜினியை அடிச்சுக்க ஆளே இல்லையா என்ற அளவுக்கு பேச்சுக்கள் எழுகின்றன. “வேங்கை மொவன் ஒத்தயில நிற்க, தில் இருந்தா மொத்தமா வாங்கல” என்று அவர் கூறும் வசனம் இன்று அவருக்கே உண்மையாக பயன்படுகிறது.
இந்த கூலி படமானது ஒட்டுமொத்த தென்னிந்திய திரை உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அடுத்தடுத்து பல சாதனைகள் டிஜிட்டல் உரிமம், சேட்டலைட் உரிமம், தியேட்டரிகள் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் இதுபோல எக்கச்சக்கமான சாதனைகளை படைத்தது கொண்டிருக்கிறது கூலி.
தற்போது டிக்கெட் “pre booking” சேல்ஸ் ஒட்டுமொத்த திரையுலகையே அசைத்து பார்த்துள்ளது. பான் இந்தியா படம் என்பதால் மிகப்பெரிய எதிர்ப்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் 100 கொடியை தாண்டி ப்ரீ புக்கிங் சேல்ஸ் போய் கொண்டிருகிறது.
போறபோக்க பார்த்தா இதுவரை வரலாறு படைத்த அணைத்து படத்தையும் கீழே தள்ளி முதல் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் போல கூலி. இதுவரை மொத்த வசூல் 600 கோடி தொட்டு விட்டதாம். அனைவரும் 1000 கோடி வசூலையும் தாண்டி கூலி சாதனை படைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்களாம்.