தமிழ் சினிமாவில் பாடல்கள் ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், சில படங்கள் பாடல்களே இல்லாமல் ரசிகர்களின் மனதை வென்றுள்ளன. கதையின் வலிமை, நடிப்பின் தீவிரம் மற்றும் இசையமைப்பாளர்களின் பின்னணி இசை (BGM) மட்டுமே இவற்றை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இங்கே அப்படியான 5 சிறந்த படங்களைப் பார்ப்போம்.
ஆரண்ய காண்டம் 2011 ல் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய படம் ரவி கிருஷ்ணா யாஸ்மின் பொன்னப்பா சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்த திரில்லர் திரைப்படம். எஸ். பி. பி. சரண் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வித்தியாசமான திரைக்கதை, நகரத்தின் இருண்ட உலகை பிரதிபலிக்கிறது.
பயணம் 2011-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. ராதா மோகன் இயக்கத்தில் நாகர்ஜுனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பயமூட்டும் சூழ்நிலையில் பயணிக்கும் கதாப்பாத்திரங்கள் எப்படி அதிலிருந்து தப்புகின்றனர் என்பதே இதன் மையம்.
துப்பறிவாளன் 2017 ல் மிஸ்கின் இயக்கத்தில், விஷால், பிரசன்னா, வினை ராய் நடித்த துப்பறிவாளன் ஒரு அதிரடி த்ரில்லர். இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார். கணியன் பூங்குன்றனார் என்ற தனியார் துப்பறிவாளர் சிறுவனின் நாய் கொலை வழக்கை விசாரிக்கிறார். அந்த விசாரணை பெரிய குற்றச் சதியை வெளிப்படுத்தும் விதமாக நகர்கிறது.
கைதி 2019 ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் ஒரு இரவில் நடக்கும் அதிரடி திரைப்படம். பாடல்களே இல்லாமல் சாம் சி எஸ் வழங்கிய பின்னணி இசையால் மட்டுமே பரபரப்பை உருவாக்கியது. எஸ்.ஆர். பிரகாஷ் பாபு தயாரித்த இப்படம் சிறையில் இருந்து வெளிவந்த கைதியின் எதிர்பாராத போராட்டத்தைச் சொல்கிறது.
சூப்பர் டீலக்ஸ் 2019 ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாடல்களே இல்லாமல், யுவன் ஷங்கர் ராஜா வழங்கிய பின்னணி இசையால் மட்டுமே வெளியான சூப்பர் டீலக்ஸ் பல கதைகளை இணைக்கும் தனித்துவமான படம். விபச்சாரத்தில் சிக்கிய பெண், விவாகரத்து பெற்ற தம்பதிகள், பாதிரியார் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் சமந்தா ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பாடல்களில்லாமலேயே, வலுவான கதை, சிறப்பான நடிப்பு, அசத்தும் பின்னணி இசை மூலம் இந்த படங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளன. இவை நல்ல சினிமாவுக்கு பாடல்கள் மட்டுமே அல்ல, உள்ளடக்கம் தான் முதன்மை என்பதை நிரூபிக்கின்றன.