Coolie Trailer: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
நேரு ஸ்டேடியத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக ஏழு மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்ரைலரை வெளியிட்டது.
ஒருத்தன் பிறக்கும் போதே அவன் எப்படி யார் கையால சாவணும்னு அவன் நெத்தியில எழுதி இருக்கும் என்ற வசனத்துடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது. மலையாள நடிகர் சவுபின் ஹார்பரில் பல கூலி ஆட்களை வைத்து வேலை பார்க்கிறார்.
பாட்ஷா வைஃப், ரஜினியின் ஆரா, லோகியின் அதிர்வு
இந்த 14,000 பேரில் நான் தேடுவது ஒரு கூலியை, ஒருத்தன 20 வருஷமா நான் சைலன்ட் மோடில் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார், இதிலிருந்து இவர் ரஜினியை தான் சொல்கிறார் என தெரிகிறது.
இதைத் தொடர்ந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஆமீர் கான், சுருதிஹாசன் அடுத்தடுத்து காட்சிகளில் வருகிறார்கள். அதன் பிறகு தான் ரஜினிகாந்த் வரும் காட்சிகள் அதிரடியாக, அரங்கம் அதிரட்டுமே என்ற வரிகள் உடன் வருகிறது.
ஹார்பரை சுற்றி ஏதோ ஒரு குற்ற செயல் நடக்கிறது, இதில் நாகார்ஜுனா ஒரு மிரட்டலான வில்லன், அதே நேரத்தில் சத்யராஜ் இந்த குற்றங்களை கண்டுபிடிப்பவர், அவருக்கு ஏதோ ஆகிவிட சுருதிஹாசன் அவரைத் தேடுகிறார், அதே நேரத்தில் சத்யராஜ் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது.
படம் கிட்டத்தட்ட பாட்ஷா சாயலில் இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. வழக்கம் போல ரஜினிகாந்தின் ஆரா, லோகேஷ் கனகராஜ் அதிர்வுகள் என ட்ரெய்லர் பட்டையை கிளப்பி இருக்கிறது.