Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் கஞ்சத்தனத்தின் நம்பர் ஒன்றாக இருந்தாலும் மகள்கள் விஷயத்தில் தாராள பிரபுவாக தான் பணத்தை வாரி இறைத்தார். ஆனால் மகள்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதற்கு ஏற்ப பாண்டியனுக்கு மன கஷ்டமும் நிம்மதி இல்லாத வாழ்க்கையும் தான் அமைந்திருக்கிறது.
ஆனால் அதுவே மகன்கள் என்று வரும்போது மகன்களிடம் கண்டிப்பாகவும் பணம் விஷயத்தில் கரராகவும் ஒரு எம்டன் போல நடந்து கொள்கிறார். பாண்டியனின் இந்த தொந்தரவு சகித்துக் கொண்டு செந்தில் கடையில் வேலை பார்த்த வந்தாலும் எல்லோருமே அசிங்கப்படுத்தும் விதமாக பாண்டியன் அராஜகம் பண்ணி வருகிறார். பாண்டியனின் இந்த கேரக்டருக்கு தான் அரசி தற்போது கொடுமையை அனுபவிக்கும் விதமாக குமரவேலுவிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
அரசி என்னமோ குமரவேலுவை பழிவாங்க வேண்டும் என்று தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு சக்திவேல் குடும்பத்தில் இருக்கிறார். ஆனால் அரசி ஒரு அடி பாஞ்சா, குமரவேலு 16 அடி பாயும் விதமாக குடும்பத்தின் முன் அவமானப்படுத்தி காயப்படுத்துகிறார். இப்படித்தான் சாப்பாடு வைக்கும் போது வேண்டுமென்று குமரவேலு தட்டை தள்ளிவிட்டு அரசியை என்னதான் உங்க வீட்ல உன்ன வளர்த்து வச்சிருக்காங்களோ. வளர்ப்பு சரியில்லை என்று எல்லோரது முன்னாடியும் அரசியை அவமானப்படுத்தி விட்டார்.
அப்பொழுது அரசி திருப்பி எதுவும் பண்ண முடியாமல் அமைதியாகி நின்றார். ஆனால் ரூமுக்குள் வந்ததும் குமரவேலுவை குத்து குத்துன்னு குத்தி ரூமை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். ஆனால் என்ன இருந்தாலும் இதில் பாதிக்கப்பட்டிருப்பது அரசி மற்றும் பாண்டியன் குடும்பம் தான். அரசி தான் ஏதோ புத்தி கெட்டுப் போய் இந்த மாதிரியான முடிவை எடுத்திருக்கிறார்.
ஆனால் விஷயம் தெரிந்த பாண்டியன் மருமகளும் டம்மியாக இருப்பது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. குமரவேலு அரசி கழுத்தில் தாலி கட்டவில்லை என்று மீனா ராஜிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் பிரயோஜனம் இல்லை என்பதற்கு ஏற்ப கல்லு மாதிரி மீனா ராஜி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.