Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு அரசியை காயப்படுத்த வேண்டும் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி திட்டிவிட்டு பாண்டியன் வளர்ப்பையும் பற்றி தவறாக பேசி விடுகிறார். குமரவேலு இந்த மாதிரி நடந்து கொண்டதை பார்த்து சக்திவேல் ரொம்பவே சந்தோஷப்பட்டு கொள்கிறார்.
ஆனால் அரசியால் எதுவும் பேச முடியாததால் குமரவேலு திட்டும் பொழுது அமைதியாக கேட்டுக்கொள்கிறார். ஆனால் ரூமுக்குள் வந்ததும் இதே மாதிரி குமரவேலு திட்ட ஆரம்பித்த பொழுது, பொங்கினது போதும் என்று அரசி சூறாவளியாக மாறிவிட்டார். தன் கழுத்தில் போட்டிருந்த தாலியை கழட்டி குமரவேலு கழுத்தை நெறித்து மரண பயத்தையே காட்டி விட்டார்.
இதனால் பயந்து போன குமரவேலு, அரசிக்கு அப்படியே அடங்கி போய்விட்டார். உடனே அரசி, என்னை எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்படுத்திவிட்டு நீ இங்கே சொகுசா தூங்கிட முடியுமா? என்று சொல்லி குமரவேலுவே வெளியே போய் தூங்க சொல்லி கதவை சாத்தி விடுகிறார்.
அடுத்ததாக செந்திலுக்கு மீனாவின் அப்பா போன் பண்ணி ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் நீங்களும் என்னுடைய மகளும் இப்பொழுதே வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டு போனை வைத்து விடுகிறார். உடனே செந்தில், மீனாவிடம் சொல்லிய நிலையில் இரண்டு பேரும் சேர்ந்து பாண்டியனிடம் வீட்டுக்கு போயிட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்.
உடனே பாண்டியன், செந்திலை திட்டிவிட்டு கடையில் அவ்வளவு வேலை இருக்கிறது அதெல்லாம் முடிக்காமல் நீ ஏன் போகிறாய் என்று கேட்கிறார். அதற்கு மீனா, அப்பா இப்படி போன் பண்ணி கூப்பிட மாட்டாங்க. இப்பொழுது ஃபோன் பண்ணி இருக்கிறாங்க என்றால் உடம்புக்கு ஏதாவது முடியாமல் போய் இருக்குமோ என்று பயம் இருக்கிறது. அதனால் நானும் இவரும் போய் பாத்துட்டு வருகிறோம் என்று சொல்கிறார்.
அதன் பிறகு பாண்டியன் நான் இதைப் பற்றி யோசிக்கவே இல்லை. நீங்கள் போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார். உடனே கோமதியிடம் உன் பையனுக்கு ரொம்ப திமிரு, ஓவராக தான் பேசுகிறான் என்று சொல்கிறார். அதற்கு கோமதி அதெல்லாம் ஒன்னும் இல்லை அவன் சாதாரணமாகத்தான் பேசிட்டு போகிறான் என்று சொல்லிவிடுகிறார்.
இதை எல்லாம் தாண்டி செந்தில், அப்பா சொல்ற அளவுக்கு அந்த வேலை இன்னைக்கே முடிக்க வேண்டியது இல்லை. ஆனால் என்னை எப்படி எல்லாம் திட்டுகிறார் பாரு என மீனாவிடம் பீல் பண்ணி பேசுகிறார். மீனா அதெல்லாம் விடுங்க நம்ம இப்பொழுது வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு போகிறார்.
அங்கே போனதும் அப்பாவிடம் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா உடம்புக்கு ஏதாவது சரியில்லையா என்று கேட்கிறார். அதற்கு மீனாவின் அப்பா, ஒரு பிரச்சனையும் இல்லை மாப்பிள்ளையின் வேலை விஷயமாக பேச தான் கூப்பிட்டேன் என்று சொல்கிறார். வேலை கிடைத்திடுமா என்று மீனா கேட்ட பொழுது, உனக்கு ஏன் சந்தேகம் நிச்சயம் கிடைக்கும் என்று மீனாவின் அம்மா சொல்கிறார்.
உடனே மீனாவின் அப்பா, மாப்பிள்ளைக்கு பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்து விட்டது. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்குவதற்கு தான் நம் மூன்று பேர் சேர்ந்து போக வேண்டும் என்று சொல்லிய நிலையில் செந்திலுக்கும் மீனாவுக்கும் அதிக அளவில் சந்தோசம் கிடைத்து விட்டது. எது எப்படியோ பாண்டியன் தொந்தரவிலிருந்து செந்தில் தப்பிக்கப் போகிறார்.
மீனாவின் அப்பா போட்ட பிளான் படி செந்திலுக்கு இந்த வேலை கிடைத்து விட்டால் அப்பாவை நம்பி இருக்க தேவையில்லை. ஏதாவது பிரச்சனை என்றால் கவுரவமாக தனியாக வந்துவிடலாம் என்று மீனாவின் அப்பா நினைத்தார். அதனாலேயே செந்திலுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுக்க முயற்சி எடுத்தார். அந்தப் பிளானும் தற்போது வெற்றி அடைந்து விட்டது.