Ayyanar Thuani: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், பாண்டியனுக்கும் வானதி மேல் லவ் வந்துவிட்டது. இதனால் சந்தோஷமான வானதி, பாண்டியனிடம் மெசேஜ் பண்ணி பேச ஆரம்பித்து விட்டார். அதோடு இல்லாமல் எல்லோரும் தூங்கிய பிறகு பாண்டியனிடம் பேச வேண்டும் என்று போன் பண்ணுகிறார்.
பாண்டியனும் யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து மணிக்கணக்காக போன் பேச ஆரம்பித்து விட்டார். அந்த நேரத்தில் பல்லவன், பக்கத்தில் இருந்த அண்ணனை காணும் என்று வெளியே வந்து பார்க்கும் பொழுது வானதியுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார்.
உடனே பல்லவன், பாண்டியனை கிண்டல் அடிக்கும் விதமாக நீ லவ் பண்ணுகிறாயா? ? நம்ப முடியலையே என்று கேட்கிறார். உடனே பாண்டியனை பார்த்து பல்லவன், நடக்கட்டும் நடக்கட்டும் என்று சொல்கிறார். அடுத்தபடியாக சேரனுக்கு ஜோடியாக வந்திருக்கும் அனிஷின் தங்கை சாந்தோணிக்கும் சோழனுக்கும் அடுத்து கல்யாணக் கதை வரப்போகிறது.
இதற்கிடையில் மனோகரின் சூழ்ச்சியால் சோழன் நிலாவுக்கு விரிசல் ஏற்படும் விதமாக சில விஷயங்கள் ஆரம்பம் ஆகிவிட்டது. அந்த வகையில் நிலாவின் அண்ணன் காலில் அடிபட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டும் என்று மனோகர் டிராமா பண்ணுகிறார்.
உடனே சோழனை பார்த்து மாப்பிள்ளை எனக்கு இந்த உதவியை மட்டும் பண்ணி விடுங்க. இதில் பணமும் நகையும் இருக்கிறது அட்ரஸும் தருகிறேன் அங்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார். சோழன் யோசித்த நிலையில் நிலா, அப்பா கேட்கிறார் இந்த உதவியை செய்யுங்க என்று சொல்கிறார்.
அதன்படிச் சோழன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகும் பொழுது மனோகரின் ஆட்கள் அந்த பணத்தை பறித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். இதனால் பணம் போக வேண்டிய இடத்திற்கு போகவில்லை என்று மனோகர் மற்றும் அண்ணனும் நிலாவிடம் சொல்லிய நிலையில் மொத்த பழியும் சோழன் மீது விழுகிறது. இதனால் நிலா சோழன் நிலைமை என்ன ஆகும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.