Pandian stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆரம்பத்தில் தங்கமயில் பொய் சொல்லி வில்லியாக பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களை பிரிக்க வேண்டும் என்று வந்தார். ஆனால் போகப் போக தங்கமயில் நல்ல கேரக்டர் ஆகவும், பாவமாகவும் பார்ப்பவர்களுக்கு பிடித்துப் போய்விட்டது. தற்போது சொல்லாத பொய்க்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக சரவணன் மூலம் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்.
அதே மாதிரி சுகன்யா, பழனியை கட்டிட்டு வந்து டார்ச்சர் கொடுத்து பாண்டியன் வீட்டிற்கு ஏற்ற மருமகள் இல்லை. இவளை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்ற மோசமான கேரக்டரில் இருந்தார். அதனால் எப்பொழுது சுகன்யாவின் உண்மையான முகத்திரை வெளியே வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அரசி விஷயத்தில் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்த விதமாக கோமதியிடம் அடி வாங்கி திட்டு வாங்கிய பிறகு திருந்திவிட்டார்.
முக்கியமாக முதல் திருமணத்தில் பட்ட கஷ்டத்தை நினைத்து பயத்தில் நடுங்கும் சுகன்யாவை பார்க்கும் பொழுது பாவமாகத் தான் இருக்கிறது. அந்த வகையில் வில்லி கேரக்டருக்கு நெகட்டிவ் ஆக இருப்பார்கள் என்று நினைத்த இருவருமே திருந்திய நிலையில் குமரவேலுவும் இப்பொழுது திருந்துவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ரவுடித்தனம் பண்ணி பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த குமரவேலு அரசியை பகடகாயாக பயன்படுத்தினார்.
ஆனால் தற்போது ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு மனம் மாறி செய்த தவறை நினைத்து பீல் பண்ணுகிறார். இப்படி எல்லாமே பாசிட்டிவ் ஆக அமைந்து வரும் இந்த சீரியலில் சக்திவேல் மட்டும் திருந்தாமல் பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதற்கு சதி செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் பணம் கொடுத்து அரசாங்க உத்தியோகத்தை வாங்கிய செந்தில் பேராசையுடன் ஒரு கணக்கு போட்டு வருகிறார்.
ஆனால் இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக செந்திலுக்கு அரசாங்க வேலை பறிபோகப் போகிறது. இன்னொரு பக்கம் ராஜி கனவை நினைவாக்கும் விதமாக கதிர் கூடவே இருந்து எல்லா சப்போர்ட்டுகளையும் செய்து கை தூக்கி விடுகிறார். அந்த வகையில் ராஜி நினைச்சபடி போலீஸ் ஆகவும் கதிர் நெனச்சபடி பிசினஸ் வேலையும் தொடங்கி விடுவார்.