ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பார்க்கவிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று குணசேகரன் வீட்டில் இருக்கும் நான்கு மருமகளும் ப்ளான் பண்ணி விட்டார்கள். இதற்கு சக்தி மற்றும் ஜீவானந்தமும் உதவி செய்யும் விதமாக மறைமுகமாக சப்போர்ட் பண்ணி வருகிறார்கள்.
அதனால் ஈஸ்வரி பேச்சைக் கேட்டு தர்ஷன், குணசேகரிடம் எனக்கு நீங்கள் பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் என்று சொல்லிவிட்டார். அதோடு மட்டுமில்லாமல் நான் கல்யாணம் பண்ணுகிறேன், ஆனால் பார்க்கவியை யாரும் தொந்தரவு பண்ணக்கூடாது என்று சொல்லி குணசேகரன் கும்பலை நம்ப வைக்க ஈஸ்வரி பிளான் பண்ணி விட்டார்.
அதன்படி தர்ஷனும் சொல்லிய நிலையில் கல்யாண வேலைகள் எல்லாம் மும்மரமாக நடைபெற ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையில் குணசேகரன், இந்தப் பெண்கள் கை மீறி போய் இவ்ளோ ஆட்டம் போடுவதற்கு முக்கிய காரணம் ஜனனி ஜீவானந்தம் தான். அதனால் இவர்கள் இரண்டு பேரையும் போட்டுத் தள்ளி பார்கவி கதையும் முடிக்க வேண்டும் என்று கதிர் மற்றும் அறிவு இடம் சொல்லிவிட்டார்.
இதனால் பரபரப்பான திருப்பங்களுடன் தர்ஷனுக்கு கல்யாணம் யாரு கூட நடக்கப்போகிறது என்ற கேள்விக்குறி ஆரம்பம் ஆகிவிட்டது. இருந்தாலும் இந்த முறை பெண்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு ஏற்ற மாதிரி தர்ஷன் பார்கவி கல்யாணம் நடக்கப் போகிறது. இந்த கல்யாணத்தின் சுவாரசியத்தை இன்னும் அதிகரிக்க கோலங்கள் சீரியலில் வில்லன் கேரக்டரில் நடித்த ஆதி என்டரி கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் மட்டும் வந்துவிட்டால் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் 2 சீரியல் தான் முதலிடத்தை பிடித்து விடும். விட்ட இடத்தை பிடிப்பதாகவும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் நடிப்பை போலவும் ஆதி கேரக்டர் மக்கள் மனதில் இடம் பிடித்து பழைய மாதிரி பட்டி தொட்டி எல்லாம் எதிர்நீச்சல் 2 சீரியல் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.