Parthiban : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய கருப்பு படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் இன்று வெளியாகி இருந்தது. சமீபகாலமாகவே தமிழ் சினிமாவை பொருத்தவரையில் காபி சர்ச்சை இருந்து வருகிறது. அதில் இப்போது கருப்பு படமும் சிக்கி இருக்கிறது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரில் சிகப்பு மற்றும் கருப்பு பேக்ரவுண்டில் கடவுள்கள் நடுவே சூர்யா இருப்பது போன்ற போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் உக்கிரமான கடவுள்களின் நடுவே மிகவும் கோபத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.
பார்த்திபன் பட போஸ்டரை காப்பியடித்த ஆர்ஜே பாலாஜி

இது பார்த்திபனின் இரவின் நிழல் போஸ்டர் போல இருப்பதற்காக விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஏனென்றால் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சாயலில் இருந்து உள்ளது. இதிலும் பின்னால் கடவுள் இருக்கும் நிலையில் பார்த்திபனை சுற்றி மனிதர்கள் இருக்கிறார்கள்.

போஸ்டரையே ஆர்ஜே பாலாஜி காப்பியடித்திருக்கிறார் என்று விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பார்த்திபனும் தனது சமூக வலைதளத்தில் பதில் கொடுத்திருக்கிறார். அதாவது இரவின் நிழல் படத்தின் போஸ்டரை கண்ணதாசன் உருவாக்கினார்.
என்னுடைய அடுத்த படத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் மிகவும் பிசியாக இருப்பதால் தனக்கு மகிழ்ச்சி தான் என்று பார்த்திபன் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவு ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.