Vijay Tv: விஜய் டிவி சேனல் பிரபலம் ஆனதற்கு முக்கிய காரணம் இதில் வரும் ரியாலிட்டி ஷோ மக்களை அதிக அளவில் என்டர்டைன்மென்ட் செய்ததால் தான். ஆரம்ப கட்டத்தில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சி தொடங்கி இப்பொழுது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
அதனால் ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு ரியாலிட்டி ஷோகளும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பித்த குக் வித் கோமாளி சீசன் 6 எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் புகழ் சௌந்தர்யா ஷபானா வைத்து கொஞ்சம் உருட்டிக்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இன்னும் முடிவடைவதற்குள் பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள். அதாவது எப்பொழுதுமே அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்குவார்கள், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சீக்கிரமாக முடித்துவிட்டு செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கலாம் என்று விஜய் டிவி சேனல் முடிவெடுத்து விட்டது.
அதனால் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி சேனல் இறங்கி இருக்கிறது. கடந்த ஏழு சீசன்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் மற்ற வேலையில் பிஸியாக இருப்பதால் கடைசி சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கினார். இவருடைய பேச்சு வித்தியாசமாகவும், கண்டிக்கும் விதமும் வித்தியாசமாக இருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு இவர் பொருத்தமாக இருக்கிறார் என்று மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார். இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் வரப்போகிறது.